Sunday, June 12, 2011

அம்பானி பையனும் அப்புசாமி பையனும்...

கொஞ்ச நாள் முன்னாடி தமிழ்நாட்டு நண்பர் ஒருத்தரிடம் கதையடித்தேன். நண்பர் லேசுப்பட்டவர் இல்லை. அன்னா ஹசாரே உண்ணா விரதம் இருந்தாருன்னு இவரும் ரெண்டு நாள் சாப்பிடாம இருந்தவர். அப்பப்போ சமுதாயத்த பத்தி இவரு பேசுறத கேட்டா, எனக்கு காதுல 'static' அடிக்கும். பேச்சு, அங்க சுத்தி இங்க சுத்தி அரசியலுக்கு வந்திடுச்சு...

நண்பர்: நம்ம தமிழ்நாட்டு ஜனங்கள திருத்தவே முடியாது. இவங்களுக்கு இதுவும் வேணும். இன்னமும் வேணும். அந்த அம்மாவை ஆட்சியில உக்கார வெச்சாங்க இல்ல... நல்லா படட்டும்..
நான்: ஏன்டா.. ரெண்டு மாசத்துக்கு முன்னாடி அய்யாவோட ஆட்சிய திட்டுனியே...
நண்பர்: அது வேற.... ஆனா, அந்த ஆளு கொண்டு வந்தாருன்னு, சமச்சீர் கல்வி திட்டத்த நிறுத்திடுச்சே.. இந்த அம்மாவை திருத்தவே முடியாது.
நான்: அந்த அம்மா எதுக்காக நிறுத்திச்சுன்னு எனக்கு தெரியாது. ஆனா, அதை நிறுத்தினது உத்தமம். சமச்சீர் கல்வி ஒரு உதவாத திட்டம்.
நண்பர்: உன்னைய மாதிரி படிச்ச கொழுப்பெடுத்த '!@#$%^' ஆளுங்க இருக்கறதாலதான் நம்ம நாடு உருப்படாம இருக்கு. உனக்கெல்லாம் படிச்சு அமெரிக்கா போயிட்ட கொழுப்பு. மவனே, நீ மட்டும் இந்தியா பக்கம் வந்தா, உன்னைய ''!@#$%^ '!@#$%^ '!@#$%^' பண்ணிடுவேன்....
நான்: Oops..
....
....

அப்புறம் பேச்சு வேற பக்கம் போயிடுச்சு. இப்போ யோசிச்சு பார்க்கிறேன். உண்மையிலேயே, சமச்சீர் கல்வி திட்டம் அவசியமா? அதனால யாருக்கு என்ன லாபம்? தமிழ்நாட்ட பொறுத்த அளவில், கல்வியோட தரம் சரியா இல்லைன்னு ஒத்துக்கறேன். அது சரி செய்ய பட வேண்டியது அவசியம். ஆனால், எல்லாருக்கும் அரசாங்கம் சொல்ற பாடத்திட்டம் தேவையா? முதல்ல, சமச்சீர் கல்வின்னா என்ன?

எல்லா மாணவர்களுக்கும் ஒரே விதமான கட்டமைப்பு வசதிகள், ஒரே விதமான திறமையுள்ள ஆசிரியர்கள், ஒரே விதமான பாடத்திட்டம் இதெல்லாம் இருக்கணும். இதுல சொல்லாத ஒரு விஷயம் - ஒரே விதமான கட்டணம். மத்த எல்லாம் ஒரே மாதிரி இருந்தா எவன் அதிக கட்டணம் கொடுப்பான்? ஒரே கட்டணம் தான் கொடுப்பான். படிக்கும் போது புல்லரிக்குது. எல்லாருக்கும் ஒரே விதமான கல்வி. இல்லையா? இல்லை... ஒரு சில விஷயங்கள் படிக்கும் பொழுது புல்லரிச்சாலும் நடைமுறைக்கு ஒத்து வராது. ஏன்?

இப்போ நம்ம ஊருல அரசாங்கமே பள்ளிக்கூடம் நடத்துது. அவங்க நடத்துற பள்ளிகூடத்துல ஒரே பாடத்திட்டம் ஏற்கனவே இருக்கு. மத்தபடி இருக்குற 'மெட்ரிக்' மாணவர்களுக்கு மட்டும்தான் வேற பாடத்திட்டம். இதுல எது நல்ல பாடதிட்டம்ன்னு சொல்லி தெரிய வேணாம். உங்களுக்கு எல்லாரும் நல்ல கல்விய அடையனும்முன்னு ஆசை இருந்தா அரசாங்க பாட திட்டத்த மாத்தலாமே? செய்ய மாட்டாங்க. அத விட்டுட்டு 'மெட்ரிக்' பாட திட்டத்தோட தரத்த குறைப்பாங்க. இது தேவையா? இவங்க பாடத் திட்டம் புடிச்சிருந்தா ஜனங்க பிள்ளைகள அரசாங்க பள்ளிக்கூடத்துல சேர்த்து விடுவாங்களே... அப்படி செய்யாத போதே தெரிய வேணாம். தப்பு எங்கன்னு? அத சரி பண்ணுறத விட்டுட்டு எல்லாருக்கும் ஒரே கல்வி திட்டம் ரொம்ப அவசியமா.....

அடுத்து எல்லாரும் கேட்குற ஒரு கேள்வி.... 'இந்த உலகத்துல பிறக்குற எல்லா குழந்தைகளும் சமம். அப்படி இருக்கும் பொழுது அம்பானி பையன் ஒரு மாதிரி படிப்பு படிக்குறான். அப்புசாமி பையன் ஒரு மாதிரி படிப்பு படிக்குறான். இது தப்பு இல்லையா? இது அந்த குழந்தையோட உரிமைய பாதிக்காதா?

ஜனங்க இந்த கேள்விய கேட்டாத்தான் எனக்கு அப்புடியே பத்திகிட்டு வரும். இந்த விசயத்துல அந்த குழந்தையோட உரிமை ஒண்ணுமே இல்லை. ஒரு மனிதனுக்கு கல்வி, உரிமை கிடையாது. அது ஒரு வசதி, பரிசு. It is not a right. But, it is a privilege. ஆனால், அந்த குழந்தைக்கு என்ன மாதிரியான கல்வி கிடைக்கணும் முடிவு பண்ற உரிமை அந்த குழந்தையோட அம்மா அப்பாவுக்கு இருக்கு. அந்த உரிமை அவரவர் உழைப்புக்கும் தகுதிக்கும் ஏற்றவாறு அமையும். பெட்ரோல் பங்குல வேலை பார்த்து பின் வாழ்கையில் கஷ்டப்பட்டு உழைச்சு முன்னுக்கு வந்த அம்பானிக்கும், அஞ்சாம் வகுப்போட படிப்ப நிறுத்தி பின் மாடு மட்டுமே மேச்ச அப்புசாமிக்கும் ஒரே மாதிரி உரிமை இருக்க முடியாது. அம்பானியோட உழைப்புக்கு கிடைத்த பரிசு அவரு பையனோட கல்வி. இப்போ அம்பானி பையனும் அப்புசாமி பையனும் ஒரே மாதிரி படிக்கனும்ன்னு சொன்னா இது அம்பானியோட உரிமைய பறிக்கறது. இது மட்டும் சரியா?

வெறும் அரசியலுக்காக இந்த மாதிரி கல்வி திட்டத்த கொண்டு வந்து தமிழர்கள் வாழ்கையில் முன்னேற இருக்குற ஒரே நம்பிக்கையான கல்வியில மண்ணை போட கூடாது.

17 comments:

gayathri said...

yendha kozhandhaium ambanikku pirakkaromo appasamikku pirakkramonnu pathu pirakkardhu illa...so education should be common to all kids...but agreed with ur point that instead of bringing down Metric education govt school can provide much better education..indha ithu pona washing machinum, color TVum koduthu yenna seyya poranunga...adhukku padhila indha madhiri yedhavadhu uruppadiya seyyalam...

Sarangan Rajamanickam said...

வாங்க காயத்ரி,
எந்த குழந்தையும் அதோட அப்பா அம்மாவ தேர்வு செய்வதில்லை.. நியாயம்தான்... அதுக்காக எனக்கும் அம்பானி பையனுக்கும் ஒரே மாதிரி கல்வி வேணும்முன்னு சொன்னா, அப்போ ஒரே மாதிரி கார் பங்களா வேணும்முன்னு சொல்லுவேன்.. சரியா? தப்புத்தான... அது மாதிரி ஒரே மாதிரி கல்வி வேணும்முன்னு சொல்றதும் தப்புதான்

Anonymous said...

சாரங்கன் அவர்களுக்கு...

சமச்ச்சீர் கல்வி திட்டம் என்பது மிகவும் வரவேர்க்க பட வேன்டிய ஒரு திட்டம் என்பதை, இப்பொழுது நடைமுறையில் கொன்டு வரப்பட்ட கல்வி திட்டம் ஒரு கேள்வி குறியாக்கி விட்டது என்பது மறுக்க முடியாத உன்மை. இப்பொழுது இருக்கும் பாட திட்டம் கன்டிப்பாக நமது மக்களை தேசிய அளவில் ஒரு போட்டியாளர்களா உருவாக்க போதுமானது கிடயாது என்பதும் மறுக்க முடியாத உன்மை. ஆனால் நீ

ஒரு விசயத்தை நன்கு புரிந்து கொள்ள வேன்டும்.

"எந்த குழந்தையும் அதோட அப்பா அம்மாவ தேர்வு செய்வதில்லை.. நியாயம்தான்... அதுக்காக எனக்கும் அம்பானி பையனுக்கும் ஒரே மாதிரி கல்வி வேணும்முன்னு சொன்னா, அப்போ ஒரே மாதிரி கார் பங்களா வேணும்முன்னு சொல்லுவேன்.. சரியா?"

இந்த கேள்வி கேக்கறதுக்கு முன்பு ஒரு விசயத்தை நீ உனர்ந்தாயா?

ஒரு நூரு வருடங்கலுக்கு முன்பு குறிப்பிட்ட சில சமூகம் மட்டுமே கல்வி கற்க முடியும் என்கின்ற நிலைமை. நீ கேட்டது போல, இதே கேள்வியை இன்று வரை அவர்கள் கேட்டு கொன்டிருந்து, கல்வியை மக்களுக்கு கொன்டு செல்லாமல் இருந்திருந்தால், தற்போதைய நிலைமையை கொஞ்சம் யோசித்து பார்த்தாயா? நீ இப்படி சுய-வலை உருவாக்கி பேசிக் கொன்டும் இருக்க முடியாது, நான் இப்படி உனக்கு

பதில் சொல்ல வேண்டிய அவசியமும் இருந்திருக்காது. எல்லாருமே மாடு மேய்த்து கொன்டு இருந்திருப்பொம் மா-க்கலோடு மா-க்கலாக பீக்காடுகலுக்கு மத்தியில்.

---தொடரும்

Anonymous said...

--தொடர்சி

"ஒரு மனிதனுக்கு கல்வி, உரிமை கிடையாது. அது ஒரு வசதி, பரிசு. It is not a right. But, it is a privilege. பெட்ரோல் பங்குல வேலை பார்த்து பின் வாழ்கையில் கஷ்டப்பட்டு உழைச்சு முன்னுக்கு வந்த அம்பானிக்கும், அஞ்சாம் வகுப்போட படிப்ப நிறுத்தி பின் மாடு மட்டுமே மேச்ச அப்புசாமிக்கும் ஒரே மாதிரி உரிமை இருக்க முடியாது. அம்பானியோட உழைப்புக்கு கிடைத்த பரிசு அவரு பையனோட கல்வி. இப்போ அம்பானி பையனும் அப்புசாமி பையனும் ஒரே மாதிரி படிக்கனும்ன்னு சொன்னா இது அம்பானியோட உரிமைய பறிக்கறது. இது மட்டும் சரியா?"

இதை சொல்லுவதர்கு உனக்கு எவ்வளவு நெஞ்சலுத்தம். அம்பானி உழைத்து சேர்த்து வைத்த சொத்தில் பங்கு கேட்டால் அது அம்பானியின் உரிமையை பறிப்பதாகும். கல்வி ஒன்றும் அம்பானி சேர்த்து வைத்த சொத்து அல்ல அவரது மகனுக்கு மட்டுமே போய் செர்வதற்கு. காலங்காலமாக படிப்படியாக கல்வெட்டுக்கலிலும், ஓலைகலிலும் தொடங்கி, பின்னர் தாள்கலிலும், நூல்கலிலும் எழுத பட்டு இப்பொலுது உன் கைகலிலும் சுய-வலை படுத்த பட்டிருக்கிரது. பல அறிஞர்கலும், வல்லுனர்கலும் ஆய்வாலர்கலும் விட்டு சென்ற சொத்து. சாதி சமயம் தாண்டிய, மொழி தாண்டிய, கண்டம் தாண்டிய ஒரு பொது சொத்து. அதை கற்று கொள்வது அணைவரது உரிமை. அந்த உரிமை கொடுக்க பட்டதால்தான் நீ ஒரு கனினீ பொறியாளர். அம்பானியோட அப்பா ரெண்டு வச்சுருந்தாரு, அம்பானி நாலு வச்சுருந்தாரு..அம்பானி பையன் ஆரு வண்டி வச்சுப்பன்னு சொன்னா அது ஒரு வகையான privilege. அம்பானி உழைச்சு முன்னுக்கு வந்ததால தரமான கல்வி அம்பானி பையனுக்கு மட்டும்தான் சொந்தம்னு சொல்ரதில்ல privilege. உலக அழகிய "ஒரு" நாள் கல்யானம் பன்னி வச்சா அது வசதி, பையனுக்கு கொடுக்கிற பரிசு, அவனும் அத அடையலாம். கல்விய பரிசாக கொடுத்தால் அடைய முடியுமா? அம்பானி பணக்காரர்ங்கரதால அவரு பையன் மட்டும்தான் தரமான கல்வி படிக்கனுமா...அப்புசாமி படிக்கலங்கரதுக்காக அவரோட பையன் தரமான கல்வி படிக்க கூடாதா? இதனால் நான் என்ன சொல்ல வர்ரன்னா......கல்விங்கரது every human's right and it's not at all privilege.

---தொடரும்

Anonymous said...

--தொடர்சி

இரு இரு இரு......உன்னோட குரல் எனக்கு கேக்குது. இப்போ கொடுக்கிர கல்வி தரமானதான்னு கேக்கர. என்னோட பதில், கன்டிப்பாக கிடயாது. எல்லாரோட பதிலும் அதுவாகத்தான் இருக்கும். திட்டம் என்னவொ நல்ல திட்டம்தான், ஆனால் அது செயல்பட்டு கொன்டிருக்கும் முறைதான் தவரு.

எனக்கும் ஒரு கேள்வி உண்டு. 10-வது வரை CBSE-ல படிச்சுட்டு, நிறைய மதிப்பெண்கள் வேண்டும் என்பதற்காக 12-வது மட்டும் STATE BOARD-ல மாறி படிப்பவர்கள் எத்தனை பேர். இருவரது அறிவி திறனும் ஒன்றா? இப்பொழுது சொல், ஏன் கூடாது சமச்சீர் கல்வி? மறுபடியும் எனது பதில், சமமான மற்றும் தரமான கல்வி அனைவருக்கும் வேன்டும். ஆனால் இப்பொழுது அது கிடயாது.

காமராஜர் மதிய உணவுடன் சேர்த்து புகட்டிய கல்விதான், இன்று பல மாநிலங்கள் பின்பற்றி கொன்டிருக்கிறது. சட்டம் போட்ட பொழுது அவரை தூற்றிய மாநிலங்கல் இப்பொழுது அவர் பானியில் கல்வி புகட்டுகின்றன. திட்டம் நல்ல திட்டம்தான், ஆனால் அதில் குடும்ப வரலாற்றை கூறுவது, மக்களை கூரு போட என்பதுதான் உண்மை. மாநில முதல் மந்திரி என்கிர அதிகாரத்தை பயன்படுத்தி, ஒரே தீர்ப்பில் அதை மாற்றி இருக்க முடியும். திட்டத்தை அவர் கொன்டு வந்து விட்டாரெ என்று முடுக்க முயர்ச்சி-த்ததுதான் இன்னொரு பக்க உண்மை.

நானும் சுய-வலை எலுதுகிரேன் என்று, சொல்ல வந்த நல்ல விசயத்தை, தவரான வலியில் சொல்லி மற்றவர்கலுடன் விலகி நின்று தனித்து காட்ட இது போல் ஒரு முறை செய்யாதெ நண்பா...!!!!

Anonymous said...

--தொடர்சி

"ஒரு மனிதனுக்கு கல்வி, உரிமை கிடையாது. அது ஒரு வசதி, பரிசு. It is not a right. But, it is a privilege. பெட்ரோல் பங்குல வேலை பார்த்து பின் வாழ்கையில் கஷ்டப்பட்டு உழைச்சு முன்னுக்கு வந்த அம்பானிக்கும், அஞ்சாம் வகுப்போட படிப்ப நிறுத்தி பின் மாடு மட்டுமே மேச்ச அப்புசாமிக்கும் ஒரே மாதிரி உரிமை இருக்க முடியாது. அம்பானியோட உழைப்புக்கு கிடைத்த பரிசு அவரு பையனோட கல்வி. இப்போ அம்பானி பையனும் அப்புசாமி பையனும் ஒரே மாதிரி படிக்கனும்ன்னு சொன்னா இது அம்பானியோட உரிமைய பறிக்கறது. இது மட்டும் சரியா?"

இதை சொல்லுவதர்கு உனக்கு எவ்வளவு நெஞ்சலுத்தம். அம்பானி உழைத்து சேர்த்து வைத்த சொத்தில் பங்கு கேட்டால் அது அம்பானியின் உரிமையை பறிப்பதாகும். கல்வி ஒன்றும் அம்பானி சேர்த்து வைத்த சொத்து அல்ல அவரது மகனுக்கு மட்டுமே போய் செர்வதற்கு. காலங்காலமாக படிப்படியாக கல்வெட்டுக்கலிலும், ஓலைகலிலும் தொடங்கி, பின்னர் தாள்கலிலும், நூல்கலிலும் எழுத பட்டு இப்பொலுது உன் கைகலிலும் சுய-வலை படுத்த பட்டிருக்கிரது. பல அறிஞர்கலும், வல்லுனர்கலும் ஆய்வாலர்கலும் விட்டு சென்ற சொத்து. சாதி சமயம் தாண்டிய, மொழி தாண்டிய, கண்டம் தாண்டிய ஒரு பொது சொத்து. அதை கற்று கொள்வது அணைவரது உரிமை. அந்த உரிமை கொடுக்க பட்டதால்தான் நீ ஒரு கனினீ பொறியாளர். அம்பானியோட அப்பா ரெண்டு வச்சுருந்தாரு, அம்பானி நாலு வச்சுருந்தாரு..அம்பானி பையன் ஆரு வண்டி வச்சுப்பன்னு சொன்னா அது ஒரு வகையான privilege. அம்பானி உழைச்சு முன்னுக்கு வந்ததால தரமான கல்வி அம்பானி பையனுக்கு மட்டும்தான் சொந்தம்னு சொல்ரதில்ல privilege. உலக அழகிய "ஒரு" நாள் கல்யானம் பன்னி வச்சா அது வசதி, பையனுக்கு கொடுக்கிற பரிசு, அவனும் அத அடையலாம். கல்விய பரிசாக கொடுத்தால் அடைய முடியுமா? அம்பானி பணக்காரர்ங்கரதால அவரு பையன் மட்டும்தான் தரமான கல்வி படிக்கனுமா...அப்புசாமி படிக்கலங்கரதுக்காக அவரோட பையன் தரமான கல்வி படிக்க கூடாதா? இதனால் நான் என்ன சொல்ல வர்ரன்னா......கல்விங்கரது every human's right and it's not at all privilege.

---தொடரும்

Anonymous said...

--தொடர்சி

"ஒரு மனிதனுக்கு கல்வி, உரிமை கிடையாது. அது ஒரு வசதி, பரிசு. It is not a right. But, it is a privilege. பெட்ரோல் பங்குல வேலை பார்த்து பின் வாழ்கையில் கஷ்டப்பட்டு உழைச்சு முன்னுக்கு வந்த அம்பானிக்கும், அஞ்சாம் வகுப்போட படிப்ப நிறுத்தி பின் மாடு மட்டுமே மேச்ச அப்புசாமிக்கும் ஒரே மாதிரி உரிமை இருக்க முடியாது. அம்பானியோட உழைப்புக்கு கிடைத்த பரிசு அவரு பையனோட கல்வி. இப்போ அம்பானி பையனும் அப்புசாமி பையனும் ஒரே மாதிரி படிக்கனும்ன்னு சொன்னா இது அம்பானியோட உரிமைய பறிக்கறது. இது மட்டும் சரியா?"

இதை சொல்லுவதர்கு உனக்கு எவ்வளவு நெஞ்சலுத்தம். அம்பானி உழைத்து சேர்த்து வைத்த சொத்தில் பங்கு கேட்டால் அது அம்பானியின் உரிமையை பறிப்பதாகும். கல்வி ஒன்றும் அம்பானி சேர்த்து வைத்த சொத்து அல்ல அவரது மகனுக்கு மட்டுமே போய் செர்வதற்கு. காலங்காலமாக படிப்படியாக கல்வெட்டுக்கலிலும், ஓலைகலிலும் தொடங்கி, பின்னர் தாள்கலிலும், நூல்கலிலும் எழுத பட்டு இப்பொலுது உன் கைகலிலும் சுய-வலை படுத்த பட்டிருக்கிரது. பல அறிஞர்கலும், வல்லுனர்கலும் ஆய்வாலர்கலும் விட்டு சென்ற சொத்து. சாதி சமயம் தாண்டிய, மொழி தாண்டிய, கண்டம் தாண்டிய ஒரு பொது சொத்து. அதை கற்று கொள்வது அணைவரது உரிமை. அந்த உரிமை கொடுக்க பட்டதால்தான் நீ ஒரு கனினீ பொறியாளர். அம்பானியோட அப்பா ரெண்டு வச்சுருந்தாரு, அம்பானி நாலு வச்சுருந்தாரு..அம்பானி பையன் ஆரு வண்டி வச்சுப்பன்னு சொன்னா அது ஒரு வகையான privilege. அம்பானி உழைச்சு முன்னுக்கு வந்ததால தரமான கல்வி அம்பானி பையனுக்கு மட்டும்தான் சொந்தம்னு சொல்ரதில்ல privilege. உலக அழகிய "ஒரு" நாள் கல்யானம் பன்னி வச்சா அது வசதி, பையனுக்கு கொடுக்கிற பரிசு, அவனும் அத அடையலாம். கல்விய பரிசாக கொடுத்தால் அடைய முடியுமா? அம்பானி பணக்காரர்ங்கரதால அவரு பையன் மட்டும்தான் தரமான கல்வி படிக்கனுமா...அப்புசாமி படிக்கலங்கரதுக்காக அவரோட பையன் தரமான கல்வி படிக்க கூடாதா? இதனால் நான் என்ன சொல்ல வர்ரன்னா......கல்விங்கரது every human's right and it's not at all privilege.

---தொடரும்

Anonymous said...

items got interchanged while posting. Read in the sequence of 1st(starts சாரங்கன் அவர்களுக்கு...), 3rd (ஒரு மனிதனுக்கு கல்வி), and 2nd (இரு இரு இரு)

Sarangan Rajamanickam said...

'சாரங்கன் அவர்களே'ன்னு ஆரம்பிச்சு அடுத்து 'நீ, வா, போ' என்று மாறி அப்புறம் 'உனக்கு எவ்வளவு நெஞ்சழுத்தம்' அளவுக்கு மரியாதை போயிடிச்சு... பரவாயில்லை. உணர்ச்சி பிழம்பா எழுதி இருக்கீங்க. அதோடு எனக்கு கொஞ்சம் எருமை தோல். சரி, விடுங்க...

அடுத்து, நீங்குளும் வலை எழுதறவர்ன்னு சொல்லி இருக்கீங்க. உங்க பேரையும் வலை முகவரியையும் கொடுத்து இருக்கலாம். பேர் தெரியாத மனிதர்களுடன் விவாதம் செய்ய கொஞ்சம் தயக்கம். அதனால, 'நண்பர் அனானி'ன்னு வெச்சுகிறேன். இப்போ விசயத்துக்கு வருவோம்.

முதலில், சமச்சீர் கல்வியோட ஆதார பிரச்சனை என்னன்னு புரியாம சும்மா நூறு வருசத்துக்கு முன்னாடி அப்படி இருந்தோம். ஆயிரம் வருசத்துக்கு முன்னாடி இப்பிடி இருந்தொம்ன்னு பேசுவது சரியல்ல. சமச்சீர் கல்வி மூலமா எதை அடைய முயற்சி பண்றீங்க? எல்லாருக்கும் சமமான கல்வி. முதல்ல, எதுக்காக எல்லாருக்கும் சமமான கல்வி? ஒவ்வொரு குழந்தைக்கும் எப்படி கல்வி கிடைக்கணும்ன்னு சொல்ற உரிமை பெற்றவர்களுக்கு இருக்கு. இப்படிதான் படிக்கணும்ன்னு சொல்ற உரிமை அரசுக்கு கிடையாது.

அதை போல, நீங்க யாருக்காக இவ்வளவு உணர்ச்சி பூர்வமா பொங்குறீங்க? அம்பானி பையனுக்கா? இல்லை அப்புசாமி பையனுக்கா? நீங்கள் எழுதி இருப்பதை பார்த்தால் அப்புசாமி பையனுக்குதான்னு நினைக்குறேன். அவனுக்கு நல்ல கல்விய கொடுக்கனும்ன்னா அரசு பள்ளியில பாட திட்டத்த மாத்துங்க. யார் உங்கள தடுக்குறா? அதை விட்டுட்டு அம்பானி பையனும் இததான் படிக்கணும்ன்னு சொல்றது, Sorry... கொஞ்சம் ஓவர். சும்மா, நூறு வருஷ கதை பேசாதீங்க. என் தாத்தா நீங்க சொன்ன படி மாடு மேய்த்தவர்தான். என் அப்பா சமச்சீர் கல்வியில் படிக்கல. சாதாரண கல்வியில் தான் படிச்சார். அவர் புள்ள நான். நானும் சாதாரண கல்விதான் படிச்சேன். இப்போ நல்லா இருக்கேன். என்னய எவன் கைய புடிச்சு இழுத்தான், நல்ல கல்வி படிக்க கூடாதுன்னு? ஆட தெரியாதவனுக்கு மேடை கோணல்ன்னு பேச கூடாது.

கல்வி ஒரு privilege. அது ஒரு உரிமை கிடையாது. இதை சொல்ல எனக்கு எந்த நெஞ்சழுத்தம்மும் வேண்டாம். உண்மைய சொல்ல என்னங்க? அதுக்கு ஒரு விளக்கம் கொடுத்து இருக்கீங்களே? அடடே....புல்லரிக்குது. நான் படித்து உழைத்து சம்பாதித்து சேர்த்து வைத்ததன் பலன் என்ன? அதுதான் என் பையனோட உயர் தரமான படிப்பு. அதை கற்க அவனுக்கு கிடைக்குற வாய்ப்பு ஒரு privilege. அதை பயன்படுத்தி படித்து முன்னுக்கு வருவது அவனது திறமை. ஒரு மனிதனுடைய அடிப்படை உரிமை எது என்ற விழிப்புணர்ச்சி நம் நாட்டில் இல்லை. அதுதான் இவ்வளவு பிரச்சனைக்கும் காரணம். என் அளவில், மனிதனுக்கு இருக்கும் ஒரே ஒரு அடிப்படை உரிமை - உயிர் வாழ்வது. யாருக்கும் துன்பம் தராமல், யாரையும் துன்ப படுத்தாமல் உயிர் வாழும் உரிமை மட்டுமே மனிதனுக்கு உள்ளது. மற்ற அனைத்தும் இந்த ஒரு அடிப்படை உரிமையிலிருந்து பிறப்பவை. இந்த அடிப்படையில், மீண்டும் தெளிவாக சொல்கிறேன் "Education is a privilege. It is not a right"

Sarangan Rajamanickam said...

"அம்பானி பணக்காரர்ங்கரதால அவரு பையன் மட்டும்தான் தரமான கல்வி படிக்கனுமா...அப்புசாமி படிக்கலங்கரதுக்காக அவரோட பையன் தரமான கல்வி படிக்க கூடாதா?"

மீண்டும், மீண்டும் அடிப்படை பிரச்னையிலிருந்து விலகுறீங்க. யாரும் ஏழைகளுக்கு கல்வி கிடைக்க கூடாதுன்னு சொல்லவே இல்லை. முடிந்தால் யாராலும் படிக்க முடியும். எல்லோரும் படித்தால் ரொம்பவும் நல்லது. ஏழைகள் நல்ல கல்வியை கற்கட்டும். யாரும் கைய புடிச்சு தடுக்கல. அரசாங்க பள்ளி கூடத்துல அவங்களுக்கு என்ன வேணாலும் சொல்லி கொடுங்க. எதுக்காக அம்பானி பையனும் அதையே படிக்கண்ணும்ன்னு சொல்றீங்க? நம் நாடு கல்வி தரமானதான்னு நான் கேட்க மாட்டேன். இல்லைன்னு எனக்கே தெரியும். என்றாலும், ஒப்பு கொண்டதற்கு நன்றி...

"எனக்கும் ஒரு கேள்வி உண்டு. 10-வது வரை CBSE-ல படிச்சுட்டு, நிறைய மதிப்பெண்கள் வேண்டும் என்பதற்காக 12-வது மட்டும் STATE BOARD-ல மாறி படிப்பவர்கள் எத்தனை பேர். இருவரது அறிவி திறனும் ஒன்றா? இப்பொழுது சொல், ஏன் கூடாது சமச்சீர் கல்வி?"
ரொம்ப சுலபம். ஒலிம்ப்பிக் பயிற்சியாளரிடம் பயிற்சி பெற்று நான் உள்ளூர் போட்டியில் கலந்துகிட்டா என்னங்க தப்பு? அது என்னோட உரிமை. என்னுடைய தேர்வு. மற்றவர்களை அப்படி பயிற்சி எடுக்க கூடாதுன்னு நான் சொல்லவில்லை. எனக்கு அதிகம் பயிற்சி இருக்குன்னு சொல்லி என்னை விலக்க கூடாது. முடிஞ்சா, உங்களுக்கு தேவையான மத்தவங்களுக்கு அதே மாதிரி பயிற்சி கொடுங்க. அத விட்டுட்டு நானும் நீங்க சொல்ற பயிற்சியதான் எடுக்கன்னும்ன்னு சொல்றது சரியில்லை. இந்த பிரச்னையில் காமராஜரை எல்லாம் இழுக்காதீர்கள். விவாதம் வேறு வழியில் போய்டும்.

உங்க எல்லா விவாதத்தையும் ரசித்தேன். இறுதியான ஒன்றை தவிர. நீங்க, முதலில் சொன்ன அனைத்தும் விவாதிக்கப்படும் பிரச்சனைய பத்தி. கடைசியில் ", சொல்ல வந்த நல்ல விசயத்தை, தவரான வலியில் சொல்லி மற்றவர்கலுடன் விலகி நின்று தனித்து காட்ட இது போல் ஒரு முறை செய்யாதெ நண்பா...!!!!", சொல்லி இருப்பது தனி மனித விமர்சனம். என்னை பற்றி எதுவுமே தெரியாமல், எதற்கு இந்த வாக்கியம்? யாரிடமும் தனித்து காட்ட பட வேண்டிய அவசியமோ நிர்பந்தமா எனக்கு எதுக்கு? இது உங்க உள் மன விகாரத்தின் வெளிப்பாடுன்னு எழுத எனக்கு எவ்வளவு நேரமாகும்?

உங்க தரப்பு விவாதத்திற்கு பதில் கொடுத்தேன்னு நம்பறேன். இல்லன்னா, சொல்லுங்க. விரிவா பேசுவோம். பொறுமையா, என்னோட பதிவ படிச்சு, பின்னூட்டம் இட்டதற்கு நன்றி....

Anonymous said...

நான் என்ன எழுதியிருகிரேன் என்பதை தெளிவாக படிக்கவில்லை என்பதும், அதன் கருத்துக்களையும் நீ ஆராயவில்லை என்பதும் உனது பதிலிலிருன்து நன்றாக தெரிகிரது. நமது கருத்துக்கு எதிராக ஒருவர் எதிர் கருத்து கூரி விட்டரே என்ற வெகம்தான் உங்கலது பதிலில் தெரிகிறது. பரவயில்லை. மீண்டும் ஒரு முரை படிக்கவும். படித்தும் புரியவில்லை என்றால், இதொ அதன் அர்த்தம்

1) சமச்சீர் கல்வி என்பது, மாநில அளவிலான கல்வி திட்டம் மட்டுமே. அதன் தரம் தேசிய அளவிற்கு சரி இல்லை என்பதைதான் நானும் கூறியிருக்கிறேன்.
2) இது அம்பானி பையனை அப்புசாமி பையனுடன் படிக்க வைக்கும் நோக்கம் அல்ல. அப்புசாமி பையனை அம்பானி பையனுடன் படிக்க வைக்கும் நோக்கம். ஒருவரை தரம் தாழ்த்துவது நோக்கமல்ல. மற்றவரை தரம் உயர்த்துவது.
3) இன்னும் தெளிவு வேண்டும் என்றால், இந்த கல்வி திட்டத்தின் தரம் இன்னும் உயர்த்த பட வேன்டும் என்றுதான் நான் சொல்லுகிறேன்.

"என் அப்பா சமச்சீர் கல்வியில் படிக்கல. சாதாரண கல்வியில் தான் படிச்சார். அவர் புள்ள நான். நானும் சாதாரண கல்விதான் படிச்சேன். இப்போ நல்லா இருக்கேன்." - இது நீ சொன்னது. சாதாரண கல்வியில் படிச்ச நீ நல்ல நிலமைக்கு வந்திருக்கும் போது, சமச்சீர் கல்வியில் படித்தால் வர முடியாதா.? நல்ல நிலமைக்கு வருவதுதான் உயர் தர கல்வி என்றால், bill gates எந்த காலேஜ்-ல தங்க பதக்கம் வாங்குனாரு? இல்லை Edison எந்த காலேஜ்-ல தங்க பதக்கம் வாங்குனாரு?
[நீ 'என்' என்று கொண்டு வந்ததால், இனி நானும் அதனுடனே பயனிக்கிரேன்]

--தொடரும்

Anonymous said...

--தொடர்சி

"எதுக்காக அம்பானி பையனும் அதையே படிக்கண்ணும்ன்னு சொல்றீங்க?"
உங்கள யாரும் அப்படி வற்புறுத்தலைங்க. உனது தகுதிக்கு, எதிர் பார்ப்புகலுக்கு இந்த கல்வி போதவில்லை என்றால், இன்னமும் CBSE அதெ தரத்தோடுதன் இருக்கிறது. உன்னுடைய உயர் கல்வியை அங்கு கற்று கொள்ளளாம்.

"ஒலிம்ப்பிக் பயிற்சியாளரிடம் பயிற்சி பெற்று நான் உள்ளூர் போட்டியில் கலந்துகிட்டா என்னங்க தப்பு" - அட அட என்ன அருமையான திட்டம். ஒலிம்ப்பிக் பயிற்சி பெற்ற ஒருவன், ஒலிம்ப்பிக்கில் ஓடாமல், தன்னை தானே தரம் தாழ்த்திக் கொண்டு உள்ளூர் போட்டியில் கலந்து கொள்வது எனது உரிமை என்கிறாய். கன்டிப்பாக அது உன் உரிமை, நான் மறுக்கவில்லை. ஆனால் உன்னை விட தகுதி குறைவானவன் என்று தெரிந்தும் அவனுடைய திறமை போதவில்லை என்கிராய்.

அப்புசாமி பையனை உடன் பாடிக்க வைத்தால், தன்னை மிஞ்சி விடுவானொ என்ற பயமா, இல்லை அவனுடன் படித்தால் தோற்று விடுவோம் என்ற பயமா? ஒலிம்பிக் வீரருக்கு உள்ளூரில் பயமா.? ஆட தெரியாதவன் மேடை கோணல்ன்னு பேச கூடாதுதான். ஆட தெரிஞ்ச்சவன் ஆட வேன்டியதுதானே. ஏன் மேடை கோணல்னு பேசனும்.

ஒரு தவரான விஷயத்தை திரும்ப திரும்ப கூருவதால் அது சரி ஆகி விடாது. ஒரு குதர்க்கமான கருத்தை தர்பாவில் பேசிவிட்டல் அது தர்க்கமாகிவிடாது என்பதையும் நான் நினைவு படுத்த விரும்புகிரென். காமரஜரை பற்றி பெசாதே என்று பயமுருதுகிரீர்கள் விவாதம் வேறு வழியில் போய்டும் என்று. அவர் பேரை கேட்டதுமே அரசியல் மட்டும் தான் ஞாபகத்துக்கு வருகிரது போல. அவர் ஒரு படிக்காத மேதையும் பகுத்தறிவாளனும் கூட என்பதையும் சற்று நினைவு கொள்ளவும். படிக்காத ஒருவர் அன்று தாயகத்தில் பேசினார், இன்று சாதாரண கல்வி படிச்சே நல்ல நிலமைக்கு வந்த நீ அயலகத்தில் சென்று பெசுகிறாய், சமச்சீர் கல்வி படித்து நாளை அவன் அயலுகத்தில் பேசமாட்டான் என்று எப்படி சொல்ல முடியும்.

அடங்கப்பா... என் ஆராய்ச்சி அறிவை அதற்குள் கண்டுபிடித்து விட்டீர்கள். மகிழ்ச்சி. கருத்துக்கு எதிர் கருத்து பெறுவதுதான் பதிவின் நோக்கமே. அதனால், நீங்கள் எவ்வளவு வேகமாக எதிர்க்கிரீர்களோ அவ்வளவு நல்லது. என் தர்க்கம் தவறு என்றால் திருத்திக் கொள்ளும் மனம் எனக்கு உள்ளது. அதனால் என் வேகத்தை பற்றி நீங்கள் அதிகம் கவலை பட வேண்டாம். சமச்சீர் கல்வியின் தரம் பற்றி சொல்லி இருக்குறீர்கள். அநேகமாக இருவருக்கும் அதில் ஒரே கருத்துதான். என்றாலும், ஒரு விசயத்தை தெளிவுபடுத்துகிறேன். அதன் தரம் பற்றி எனக்கு எந்த அக்கறையும் இல்லை. என் அளவில், அதை தனியார் பள்ளியில் திணிக்க அரசாங்கத்திற்கு உரிமை இல்லை. அப்புசாமி பையன் மேல் அவர்களுக்கு கரிசனம் இருந்தால், தாராளமாக அவர்கள் அரசாங்க பள்ளியில் அதை சொல்லி தரட்டும். தனியார் பள்ளிகளை ஏன் தொல்லை தர வேண்டும்?

"இது அம்பானி பையனை அப்புசாமி பையனுடன் படிக்க வைக்கும் நோக்கம் அல்ல. அப்புசாமி பையனை அம்பானி பையனுடன் படிக்க வைக்கும் நோக்கம். ஒருவரை தரம் தாழ்த்துவது நோக்கமல்ல. மற்றவரை தரம் உயர்த்துவது."
இப்படி சொல்லித்தான் பொறியியல் படிப்பை ஏற்கனவே குப்பயாக்கி விட்டாச்சு. அது முடிஞ்சு இப்போ இது. தாராளமா தரம் உயர்த்துங்க - அப்புசாமி பையனுக்கு. அம்பானி பையன ஏன் தொல்லை பண்றீங்க?

மீண்டும் சொல்றேன்... சமச்சீர் கல்வியோட தரத்த பற்றி எனக்கு எந்த அக்கறையும் கிடையாது. உலகிலேயே, மிக சிறந்த கல்வி திட்டமா கூட அது இருக்குட்டும். ஆனால், தனியார் மீது அதை திணிக்கும் உரிமை அரசுக்கு கிடையாது. அம்பானி பையன் என்ன படிக்கனும்ன்னு முடிவு பண்ற உரிமை அம்பானிக்கும் அவர் பையனுக்கும்தான் உள்ளது. CBSE-ல் நான் படிப்பதை பற்றி நான் முடிவு செய்து கொள்கிறேன். அதை பற்றி சந்தேகம் வந்தால் தாராளமாக உங்களை கேட்கிறேன். அப்பொழுது சொல்லுங்கள்.

ஒரு சாதாரண போட்டிக்கு ஒலிம்பிக் அளவுக்கு பயிற்சி செய்த ஒருவனை போல் மற்றவரும் செய்யலாம். யாரும் இங்கு தடுக்க வில்லை. பயமா? யாரை கண்டு பயம்? முடிந்தால் எல்லோரும் படிக்கட்டும் என்று சொல்பவன் நான். அம்பானி பையனை அவன் விருப்பப்படி படிக்க விடாமல் கட்டுபடுத்துவது நீங்கள். இதில் யாருக்கு பயம் சொல்லுங்கள்?

காமராஜரை பற்றி பேசினால் விவாதத்தின் மைய கருத்தில் இருந்து விலகி விடுவோம் என்று தான் அவ்வாறு சொன்னேன். இந்த படிக்காத மேதை, பகுத்தறிவாளர் இதெல்லாம் காங்கிரஸ் மேடையில் பேச வைத்து கொள்ளுங்கள். என் அளவில் அவர் பற்றி உள்ள கருத்துக்கள் வேறு. அதை பற்றி விவாதிக்க இது சரியான களம அல்ல. யார் வேண்டுமானாலும் அயலகம் வந்து பேசட்டும். அதற்காக அடுத்தவர் உரிமையில் தலையிட கூடாது.

Anonymous said...

கோபத்தில் அறிவு மழுங்கி விட்டதோ என்று என்னும் அளவுக்கு இருக்கிறது உங்களது பதில்.

"அதன் தரம் பற்றி எனக்கு எந்த அக்கறையும் இல்லை."
இதுதான் நீ. இம்மியலவும் அக்கறையில்லாமலே தமிழக மக்கள் மீது பரிதாபப்படுவது போன்று சித்தரிக்கப்பட்ட ஒரு கட்டுரை, இப்பொழுது எள்ளி நகையாட வைத்திருக்கிறது உனக்கெதிராக.

"என் அளவில், அதை தனியார் பள்ளியில் திணிக்க அரசாங்கத்திற்கு உரிமை இல்லை"
உன் அளவில், இமை மூடிய பூனையின் உலகம் இருலும் என்று சொல்வதை காட்டிலும் கிணற்று நுணலின் உலகம் ஆழ்குழிதான் என்று கூறினால் சால சிறக்கும்.

பிணம் கூட திண்ணும் பணம் பறிக்கும் எல்லா தனியார் பள்ளிகளின் தரமும் நன்றாக இருக்கும என்கிற கற்பனையோடு இக்கருத்தை கூறியிருப்பாய் என நினைக்கிரேன். பணம் மட்டும் பிடுங்கி கொன்டு அடிப்படை வசதி கூட தராமல் 83 சிறகுகளை எரித்து பிணம் தின்ற கும்பகோனம் கொடூரம் இன்னும் கண்களுக்குள், பணம் வாங்கி கொடுத்து பறக்கும் படையை பிட் இறக்கும் படையாய் மாற்றிய பெருமையும், phisics/chemistry/biology/comsci lab work பணம் கொடுத்து செய்யாத செய்முறைக்கு முழு மதிப்பெண் என அடுக்கடுக்காய் நடந்தேறி கொன்டிருக்கும் நற்பனிகளும் சில பல தனியார் பள்ளிகள்தான் செய்கின்றன. இது போன்ற பள்ளிகளால் உனது district/state level ranking குறைந்தால் கூக்குரலெடுப்பாய், அரசாங்கம் என்ன செய்கிறதென்று. அப்பொழுது சொல்வாயா "தனியார் பள்ளிகளை கெட்க அரசாங்கத்திற்கு உரிமை இல்லை" என்று.

ஓரு மாநிலத்தில் உள்ள பள்ளிகளின் கட்டுமானம் மட்டுமல்ல, கல்வி தரத்தையும் தீர்மானிக்கும் முழு அதிகாரமும் அரசாங்கத்திற்கு உண்டு. கோடீஷ்வரனா இருந்தாலும், Co-டீ-ஈஷ்வரனா இருந்தாழும் இந்த அதிகாரம் செல்லும்.

எப்பொழுது நீ "என் அளவில்" என்று சுருக்கி கொன்டாயோ அப்பொழுதே நீ உணர்ந்து விட்டிருப்பாய் என்பதுதான் உள்கருத்து. இனியும் நீ தொடர வேண்டுமானால் உன் விருப்பம்.

மீண்டும் உன்னை வேரு பதிவில் சந்திக்கிரேன்.

- நண்பர் அனானி

Sarangan Rajamanickam said...

மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடாதீர்கள் நண்பரே!!! நான் பேசுவது தனி மனித உரிமை, தனி மனிதன் மீதும் அவன் உருவாகும் நிறுவனங்கள் மீதும் அரசாங்கத்திற்கு இருக்க கூடிய உரிமை, பற்றிய விஷயம். எதையும் புரிந்து கொள்ளாமல் உணர்ச்சி பூர்வாமாக பேசினால் மட்டும் முட்டாள்தனம் உண்மையாகி விடாது. மக்களுக்கு தேர்வு செய்யும் அதிகாரம் வேண்டும். அதில் தலையிட யாருக்கும் உரிமை கிடையாது. அதை போன்று, கல்வி ஒரு அடிப்படை உரிமையும் கிடையாது என்பதே என் வாதம். உமக்கு அது புரிய போவதில்லை என்பது திண்ணம். உம்முடைய உள்கருத்து வெளி கருத்து பற்றி என்னால் கவலை கொள்ள இயலாது.

நல்லது. மற்றொரு பதிவில் சந்திப்போம்