வெகு நாட்கள் கழித்து கவிதை என்ற பெயரில் இதை கிறுக்கினேன். யாரை பற்றி எழுதினேன்? அட.. அது எதுக்குங்க....
அழகன் அவன் ஊரில்
உதித்தவள் நீ
அன்பின் உருவாக
அமர்ந்தவள் நீ
அகிலத்து புலவர்
எல்லாம் கூடினாலும்
அறிவுக்கு அடங்காத
அதிசயம் நீ
எந்த நாளும்
என் மனதில் வாழும்
அமுதம் நீ
எப்பொழுதும் என்
கவியின்
அர்த்தம் நீ
எட்ட நின்று பார்க்கும்
என் - வாழ்கையின்
அகரம் நீ
பாற்கடலில் உருவான
அற்புதம் நீ
பார்வையிலே எனை வீழ்த்தும்
அழகியும் நீ
பார்த்தாலே முக்தி தரும்
ஆனந்தம் நீ
அன்பாய்...
அமுதமாய்....
அகரமாய்.........
ஆனந்தமாய்......
என் வாழ்கையை
ஆள்பவளும் நீயே....
இரா.சாரங்கன்
0 comments:
Post a Comment