இந்தியாவில் உள்ள நண்பர் ஒருவருடன் பேசி கொண்டிருந்தேன். நண்பர் சமீபத்தில் காதல் தோல்வி அடைந்தவர். அவர் செய்த தவறு? மிகவும் எளிமையான தவறு. காதலித்த பெண்ணை அவரால் மாதம் ஒருமுறை மட்டும்தான் பார்க்க இயலும். மற்ற நேரங்களில், தொழில் விசயமாக பல ஊர்களுக்கு பயணம் செய்ய வேண்டிய சூழ்நிலை. அதனால், தினமும் தொலைபேசி மூலம் பேசுவார். விளைவு? ஒரு முறை ஊர் திரும்பி வந்து பார்த்தார். அந்த பெண், தனக்கு அவர் மேல் காதல் இல்லை என்று கூறி விட்டார். நண்பர் மனமுடைந்து விட்டார். அதை மறக்க, அவருக்கு தெரிந்த ஒரே வழி. தனது தொழிலில் 24 மணி நேரமும் இயந்திரம் போல வேலை செய்ய ஆரம்பித்து விட்டார். இந்த நிலையில்தான் என்னுடன் பேசினார்.
பேச்சு எங்கெங்கோ அலைந்து, இறுதியில் மோகன்தாஸ் காந்தியிடம் வந்து நின்றது. நான் கேள்விப்பட்ட கதை ஒன்றை சொன்னேன் . காந்தியின் நான்காவது மகன் தேவதாஸ் காந்தி. ராஜாஜியின் மகள் லக்ஷ்மி. இவர்கள் இருவரும் காதலித்தார்கள். அப்பொழுது தேவதாசுக்கு வயது 28. லக்ஷ்மிக்கு வயது 15. இந்த வயது வித்தியாசம் காரணமாக காந்தியும் ராஜாஜியும் அவர்களை ஐந்து வருடம் காத்திருக்க சொன்னார்கள். ஒரு நிபந்தனையும் விதித்தார்கள். பிரிந்திருக்கும் ஐந்து வருடமும் இருவரும் எந்த விதத்திலும் தொடர்பு கொள்ளக்கூடாது. இருவருமே அதை ஏற்று கொண்டார்கள். ஐந்து வருடம் கழித்து 1933-இல் திருமணம் செய்து கொண்டார்கள். இந்த சம்பவத்தில் ஒரு விஷயம் யோசிக்கிறேன். காந்தியும் - ராஜாஜியும் எதற்காக அந்த ஐந்து வருட நிபந்தனை விதித்தார்கள்? வயது வித்தியாசம் மட்டும்தான் காரணமா? ஒருவேளை, லக்ஷ்மிக்கு 21 வயதாகி இருந்தால், அதே நிபந்தனை விதித்திருப்பார்களா?
நிச்சயம் விதித்திருப்பார்கள் என்று தோன்றுகிறது. அவர்கள் காதல் உண்மையானதா என்று சோதிக்க மிகவும் அற்புதமான பரீட்சை. அவர்கள் காதல் உண்மையாக இல்லாவிட்டால் நிச்சயம் ஐந்து வருடம் அவர்களால் தாக்கு பிடிக்க முடியாது. இந்த பரீட்சையில் தோல்வி அடைந்துவிட்டால் பிறகு காதலித்தவரை நினைத்து புலம்புவதில் அர்த்தமே இல்லை. ஏனென்றால், ஆரம்பத்தில் இருந்தே அது உண்மையான காதல் இல்லை. இது நடந்தது 1930-களில். இப்பொழுது காலம் மிகவும் வேகமாக முன்னேறி விட்டது. ஐந்து வருடம் எல்லாம் ரொம்ப அதிகம். ஐந்து மாதம் கூட பல காதல்கள் தாங்குவதில்லை. இதோ, ஒரு சில மாதங்கள் பிரிந்ததால் நண்பரின் காதல் தோல்வியில் முடிந்துவிட்டது. (அடியேனுக்கு, இந்த விசயத்தில் நான்கு வருடம் காத்திருந்து தோல்வி கிடைத்தது. வாழ்கையில் நான் வீணடித்த நான்கு வருடங்கள் என்ற வருத்தம் இன்றும் எனக்கு உண்டு )
இதெல்லாம் கேட்ட நண்பர் சொன்னார். இப்போதான்டா புரியுது. லவ் பண்றவன் எல்லாம் ஏன் பொண்ணுக வால புடிச்சுகிட்டே சுத்தரானுகன்னு. ஒரு நிமிஷம் விட்டாலும் விட்டுட்டு போயிருவாங்கன்னு ஒரு பயம்தான். எனக்கு என்னமோ அவர் சொன்னது உண்மைதான்னு தோணுது. பேசி முடிக்கும் பொழுது, தான் படித்த ஒன்றை சொன்னார்:
"If you love something, set it free; if it comes back it's yours. It it doesn't, it never was"
"நமக்கெல்லாம் ஞானோதயம் 26 வயசுலதான் வருது"ன்னு சொல்லி சிரித்தபடியே தொலைபேசி தொடர்பை துண்டித்தேன்.
11 comments:
YOU ARE INDEED A BRILLIANT WRITER....
This applies to boys as well.. eppo paarthalum ponnungalaye kutham solladheenga boss....there is no gender in all these craps..its more abt "individuals"
@Karthik,
Thanks.
@Narmatha,
It is just the percentage. I have seen several guys who wait for years and not a single girl who waits for months......
ponno paiyano first unmaiyavae love pannurangalanu theriyama wait panna kudathu...choosing the right person before loving is in our hands...
@sarangan: I have seen girls who has waited for 7-8 years to end up in marriage.
@santhoshkanna Aacharyama irukkuda.... Ithuvaraikkum naan paarthathillai... When I come across a bunch of them, I am sure that I will change my opinion.... :-)
dai saaranga... naalu varushama... appavukku theriyuma :D
keep writing da.. smiling whenever i read ur blog updates.. :)
@Gautham,
Nalla Vela appaavukku theriyaathu....
Machi.. Cycle gap-la unaku vayasu 26nu solleetaye da..
@Sivaraj,
Adapaavi.. Unmaiyilaye en vayasu 26 thaanda...
Post a Comment