Sunday, November 21, 2010

உணவே பிரம்மம்

'உணவே பிரம்மம்'ன்னு சொல்லுவாங்க. இந்த உலகத்துல எல்லாரும் படிக்கறதும் வேலை பாக்கறதும் சம்பாதிக்கறதும் எதுக்காக? என்னய கேட்டா முதல்ல சாப்பாட்டுகாகத்தான்னு சொல்லுவேன். மத்த விசயமெல்லாம் அப்புறம் தான். 'சந்தோசம்ன்னா என்னன்னு அனுபவிக்கும்போது தெரியாதுன்னு' விருமாண்டி படத்துல ஒரு வசனம் வரும். அது எதுக்கு பொருந்துதோ இல்லையோ சாப்பாடு விசயத்துக்கு அற்புதமா பொருந்தும். இந்தியாவுல இருந்தப்போ நல்ல சாப்பிட்டேன். அந்த காலத்துல அதோட அருமை புரியல. அமெரிக்கா வந்ததுக்கு அப்புறம் அது கிடைக்காம அலையுறப்பதான் அதோட அருமை தெரியுது.

ஆனா, ஒரு விஷயம். அமெரிக்கர்கள் சாப்பாட்டை கொண்டாடறாங்க. அதுக்காகவே, ஒரு தனி தொலைகாட்சிய 'Food TV' ன்னு லாபகரமா நடத்துறாங்க. இருநூறு வருஷம் கூட இல்ல, அவங்க வரலாறு. ஆனா, அதுல இருக்குற சின்ன சின்ன விசயத்த கூட மறக்காம தலையில தூக்கி வெச்சி கொண்டாடுறாங்க. எந்த புகழ் பெற்ற கடைக்கு போனாலும், இது என் தாத்தா எண்பது வருசத்துக்கு முன்னாடி கண்டுபிடிச்ச உணவு. அதோட ருசி மாறாம அப்புடியே இன்னமும் செஞ்சி தரோம்னு ஒரு கதை சொல்றாங்க. உதாரணத்துக்கு, நியூயார்க் நகரத்துக்கு பக்கத்தில இருக்குற 'Anchor Bar'. இங்கதான் முதன் முதலா 'Buffalo Wings'ன்னு ஒரு உணவ உருவாக்கி இருக்காங்க. இன்னிக்கும் அந்த கடைய அந்த குடும்பம் வெற்றிகரமா நிர்வகிக்குது. அவங்களோட 'Sauce'அ உலகம் பூரா ஏற்றுமதி பண்றாங்க.

அமெரிக்காவோட தென் மாநிலங்களில் 'Waffle House'ன்னு ஒரு கடை. நம்ம ஊர் இனிப்பு பணியாரம் மாதிரி ஒன்றுதான் அங்க முக்கியமான உணவு. 1955-இல் இந்த கடைய திறந்தாங்க. இந்த கடைக்கு மக்கள் தரும் வரவேற்பு ஆச்சர்யமான விஷயம். பேஸ் புக் போன்ற இணையதளங்களில் இதற்கென குழுக்கள் அமைத்து ஆதரிக்குறாங்க. அது மட்டுமல்ல. இப்போ அந்த கடைக்கு பல இடத்துல கிளைகள் இருந்தாலும், அது முதல் முதலா ஆரம்பிச்ச கடைய இன்னும் அப்புடியே பழமை மாறாமல் வெச்சிருக்காங்க. இப்பிடி ஒவ்வொரு கடை(டி)க்கும் ஒரு கதை. ஒரு வரலாறு. இது அவங்களுக்கு பல சமயம் லாபகரமான தொழிலா இருக்கு. இன்னிக்கு, நயாகரா நீர் வீழ்ச்சிய பாக்க போற யாரும் 'Anchor Bar' போகாம வர மாட்டாங்க.

இதே மாதிரி யோசிச்சா, நம்ம ஊருலயும் நிறையா கடைங்க லாபம் பார்க்கலாம். ஆனா, நம்ம என்ன பண்றோம்? நம்ம சாப்பாட்ட விட்டுட்டு அமெரிக்க சாப்பாட்டு பின்னாடி அலையுறோம். போன வருஷம் போனப்போ, சென்னையில இருக்கற Mcdonalds கடையுல சனம் நீள வரிசையுல நின்னு வாங்கி சாப்பிட்டத பார்த்தேன். தலையில அடிச்சுக்கிட்டு வந்தேன். 'Spencer Plaza' வுல இருக்குற 'Sub Way' இல் ஒரு 'Sub' இருநூது ஐம்பது ரூபாய்க்கு மக்கள் வாங்கி சாப்பிட்டத பார்த்தேன். உண்மையிலேயே, இந்த சனத்துக்கு நம்ம சாப்பாட்ட பத்தி தெரியுமான்னு சந்தேகம் வந்திடுச்சு.

உச்சி வெயில் மண்டைய பிளக்கும் போது, கொஞ்சம் கம்மங் கூழோ கேப்பங் கூழோ குடிச்சா ஒரு சுகம் வரும் பாருங்க. அதுவும் அதுக்கு தொட்டுக்க வெங்காயம் வஞ்சினம் இருந்துச்சுன்ன சொர்க்கம்தான். இது ராஜ ராஜ சோழன் குடிச்சது, ராஜேந்திர சோழன் குடிச்சதுன்னு எதாவது ஒரு கதை சொல்லி விக்காம, இன்னிக்கு அத சுத்தமா மறந்துட்டு கோக் பெப்சின்னு நாம குடிக்க போயிட்டோம். காலையில, இப்போ எல்லாம் சனங்க 'Corn Flakes' சாப்பிட ஆரம்பிச்சுடாங்க. இதுல எத்தனை பேரு ராகி களிய சாப்பிடுவாங்க? இந்த மாதிரி பல சாப்பாடா நாம மறந்துட்டு வரோம்ன்னு தோணுது. பதநீர், பானகம், கள்ளுன்னு இந்த சாப்பாடெல்லாம் இன்னும் அம்பது வருஷம் கழிச்சி இருக்குமான்னே தெரியலே. நம்ம ஊருல மட்டும் ஏன் இந்த நிலைமை?

1 comment:

Sivaraj Subramanian said...

I think our food is changing/evolving every 50 or 100 years.. May be that would be helpful in making our food long lasting than anything which is not changing (like american food).. (Actually I dont find any variety in their food.. Just the same old burgers..)..

Let's see where american food will be in another 50 or 100 years..