Sunday, October 10, 2010

மொக்கை தீர்ப்பு

சமீபத்தில வந்த பாபர் மசூதி தீர்ப்ப எல்லோரும் பார்த்து இருப்பீங்க. என்னை பொறுத்த அளவில் இந்த தீர்ப்பு மாதிரி ஒரு மொக்கை தீர்ப்பு வேறு எதுவும் இல்லை.

முதல்ல தீர்ப்போட சாராம்சம் என்ன: "ராமர் சர்ச்சைக்குரிய அந்த இடத்தில்தான் பிறந்தார். மக்களோட நம்பிக்கையே இதற்கு ஆதாரம். சம்பந்தப்பட்ட கட்சிகாரர்கள் மூன்று பேருமே அந்த இடத்தை அனுபவித்து வருவதால், அந்த இடத்த மூன்றாக பிரித்து, மூவருக்கும் தர வேண்டும்". இந்த தீர்ப்ப சொல்றதுக்கு 1950இல் இருந்து 2010 வரைக்கும் நாள் ஆகி இருக்கு.

சென்ற நூற்றாண்டோட ஆரம்பத்தில் அந்த இடத்தில வெறும் மசூதி மட்டுமே இருந்தது. 1936இல் இருந்து இஸ்லாமிய மக்கள் அதை உபயோகபடுத்தவில்லை என்ற மொக்கை காரணத்த சொல்லி, 1949 டிசம்பர் 22 ராத்திரி ராமர் சிலைய சில இந்துக்கள் அங்க வெக்கிறாங்க. அன்னிக்கு ஆரம்பிச்ச சண்டை இன்னிக்கு வரைக்கும் நடக்குது. நான் எல்லா இடத்துலயும் இஸ்லாமியர்கள ஆதரிப்பவன் இல்லை. ஆனா, இந்த வழக்கில இந்துக்களுக்கு எந்த உரிமையுமே இல்லை. பல நாளா உபயோகப்படுத்துலன்னு சொல்றது ஒரு காரணமா?

அப்ப, எங்க வீட்டு பக்கத்துல இருக்கற பிள்ளையார் கோவில் பல வருஷமா யாரும் போகாம இடிஞ்சு போய் இருக்கு. அதுக்காக, இஸ்லாமிய மக்கள் அத எடுத்து மசூதி கட்டினா, நாம சும்மா இருப்போமா? அவங்க பண்ணது தப்புன்னா, ராத்திரியோட ராத்திரியா சிலைய வெச்சிட்டு, அது நம்ம இடம்ன்னு சொல்றதும் தப்பு. இந்துக்களோட ஒரே வாதம், அந்த இடத்துலதான் ராமர் பிறந்தார். ராமரோட பக்தனா நான் ராமர் அயோத்யாவுல பிறந்தார்னு நம்புறேன். அது சர்ச்சைக்குரிய அந்த இடமா கூட இருக்கலாம். ஆனா, சட்டப்படி அத நிரூபிக்க முடியாது. மக்களோட நம்பிக்கை எல்லாம் ஒரு ஆதாரமா? மக்கள் ஆயிரம் விஷயங்களை நம்புவாங்க. அத எல்லாம் நீதிமன்றத்துல சாட்சியா எடுக்க முடியுமா? அத வெச்சா தீர்ப்பு சொல்லுவாங்க?

இந்த மசூதிய கட்டுறதுக்கு முன்னாடி அந்த இடத்துல கோவில் இருந்துச்சுன்னு வெச்சிப்போம். (தொல்லியல் துறையோட முடிவுகள நீதிபதிகள் முழுசா வெளியிடலை) அப்படி ஒரு கோவில் இருந்ததும், அத இடிச்சிட்டு அது மேல ஒருத்தர் மசூதிய கட்டினார்ன்னு சொல்றதும் ஆச்சர்யப்பட வேண்டிய விசயமும் இல்லை. அந்த காலத்துல, இஸ்லாமிய மன்னர்கள் பல இடத்துல இத மாதிரி செஞ்சிருக்காங்க. அதுல ஒருத்தர் இதையும் செஞ்சிருக்கார். அவர் செஞ்சது பெரிய தப்புதான். ஆனா, அவர் செஞ்சி 450 வருசத்துக்கு மேல ஆயிடுச்சு. இத்தனை வருசத்துக்கு அப்புறம் இருந்துச்சா இல்லியான்னு தெரியாத ஒரு கோவில். அங்கதான் ராமர் பிறந்தாரான்னு தெரியாத இடம். சம்பந்தமே இல்லாம திடீர்ன்னு ராத்திரி வெச்ச ராமர் சிலை. இத வெச்சி 60 வருஷமா வழக்கு நடத்தி தீர்ப்பு: மூணு பேருக்கும் பிரிச்சி கொடு. ஆக:

இனி ஒரு இடத்த அதோட உரிமையாளர் 10 வருஷம் பயன்படுத்தலைன்னு வையுங்க. நாம அந்த எடத்த தாராளமா எடுத்துக்கலாம். அப்புறம் வழக்கு ஒரு 60 வருசத்துக்கு நடக்கும். அதுக்குள்ள எப்படியாவது உங்க தாத்தாவோட தாத்தாவோட தாத்தாவோட தாத்தாவுக்கு அந்த இடம் சொந்தம்ன்னு ஒரு பத்து பேர சொல்ல வையுங்க. இதுக்கு ஆதாரம் எல்லாம் தேவை இல்லை. சும்மா ஒரு பத்து பேரு நம்புனா போதும். நம்பிக்கைதான வாழ்க்கை. அந்த இடத்துல ஒரு பாதிய நீதிமன்றம் உங்களுக்கு பிரிச்சி கொடுத்துடும். கிடைச்ச வரைக்கும் லாபம். இதே ரீதியில், தாஜ்மஹால், பெரிய கோவில் மாதிரியான இடத்துல கூட பாதிய வாங்கிடலாம். என்ன சொல்றீங்க?

No comments: