
"சொந்த புத்தி இருக்கணும். இல்லைன்னா, சொல் புத்தி இருக்கணும்."ன்னு சொல்லுவாங்க. அந்த மாதிரி, ஒண்ணு சொந்தமா கதை எழுதி படம் எடுக்க தெரியணும். அடுத்தவன் கதைய 'சுட' போறோம்ன்னு முடிவு பண்ணிட்டா, அதயாவது ஒழுங்கா செய்யணும். ரஷ்ய நாட்டுல பள்ளிக்கூடம், கல்லூரியில கூட பாடம் எடுக்குற ஒரு கதைய (First Love) 'ஷகிலா' படத்த விட மட்டமா எடுக்க கூடாது. அப்படி ஒரு படத்த இன்னிக்கி பார்த்தேன். படத்தோட பேரு, 'சிந்து சமவெளி'.
முதல்ல, எனக்கு புரியாத விஷயம், எதுக்கு இந்த படத்துக்கு 'சிந்து சமவெளி'ன்னு பேரு? மனிதனுக்கு தெரிந்த எந்த நாகரீகத்திலும் ஏத்துக்க முடியாத ஒரு கதைக்கு, ஒரு தொன்மையான நாகரீகத்தோட பேரு. தகாத உறவுகள் பத்தி படமே எடுக்க கூடாதுன்னு நான் சொல்லலை. அத பத்தி எத்தனையோ படம் வந்தாச்சு. அதில் பல படங்கள் உண்மையிலேயே நல்ல படங்கள். உதாரணத்துக்கு, 'Amores perros' என்ற மெக்சிகன் நாட்டு படம். 'BAFTA' மற்றும் 'Cannes' பட விழாக்களில் பரிசு வாங்கிய படம். 'Travellers and Magicians' என்ற படம். 'Deauville' ஆசிய பட விழாவில் பரிசு வாங்கியது.
உண்மையான கலை படத்தில கதைக்காகவும், சூழ்நிலைக்காகவும் தகாத உறவுகளை காட்டுவது வேறு. ஆனா, அதுக்காகவே படம் எடுத்துட்டு கலை படம்னு சரடு விட கூடாது. தவிர்க்க முடியாத சூழ்நிலையில, வேற வழியே இல்லன்னு தப்பு பண்றவந்தான் திருத்த முடியும். அழகா நடிச்சு புருஷன ஊருக்கு அனுப்பிச்சிட்டு தப்பு பண்ற ஒரு பொண்ணு கணவன் எழுதுன ரெண்டே வரிய படிச்சு திருந்துறாள். காதுல பூ வைக்கலாம். பூக்குடை? சாரி... டைரக்டர் சாமி.
இந்த படத்துல வர்ற அப்பா கதாப்பாத்திரம் மாதிரி ஒரு குழப்பமான மனிதனை பாக்கவே முடியாது. நண்பர் சொல்றார்னு உடனே திருந்துற அப்பா, கடைசியில எதோ வில்லன் மாதிரி பேசறது கொஞ்சம் கூட பொருந்தல. சூழ்நிலையால தப்பு செஞ்ச மனுஷன் எவனும் இப்பிடி பேச மாட்டான்.
கல்யாணம் பண்ணிக்கிட்டு ஒரு வாரத்துல வாத்தியார் வேலை பயிற்சிக்காக கணவன் போறான். அந்த தனிமையும் ஏக்கமும் அந்த பொண்ண தப்பு பண்ண தூண்டுதாம். ஐயா சாமி, கல்யாணம் பண்ணிக்கிட்டு பல வருஷம் துபாய்ல இருக்குற புருஷனோட லெட்டர்லையே குடும்பம் நடத்துற பொண்ணுங்க நெறையா இருக்காங்க. அதனால, கதையுல சொல்ற ஏக்கம், சூழ்நிலை எல்லாம் வசனத்துல தான் இருக்கு. காட்சியில ஒண்ணும் இல்ல.
உண்மையிலேயே பரிதாபமான ஒரு கதாநாயகன். தப்பு பண்ண தன்னோட மனைவி மேல அவனுக்கு கோபம் இல்ல. ஆனா, தன் அப்பா ஒரு மிருகம்ன்னு மட்டும் நம்பி அவர கொலை பண்றான். எந்த ஊர் நியாயம் இது? தப்பு ரெண்டு பேர் மேலயும்தான். ஆனா, அதில் ஈடுபட்ட ஆண் மட்டும் மிருகம். பெண் சூழ்நிலை கைதி. ஆண்டவா! ஒரு வேளை பெண்களை கவர்வதற்காக இப்பிடி ஒரு முடிவு எடுத்து இருக்காங்க போல. பாவம்... கவர்வதற்கு ஆண், பெண் யாருமே இல்லை. அந்த அளவு ஒரு மட்டமான திரைகதை, வசனம், இயக்கம்.
என் வாழ்நாளில் வெட்டியா செலவு பண்ண நேரங்கள்ல, இந்த படம் பார்த்த நேரமும் ஒண்ணு.
0 comments:
Post a Comment