Tuesday, May 04, 2010

தற்கொலை தைரியமும் என் Physics டீச்சரும்...'தற்கொலை செஞ்சிக்க ரொம்ப தைரியம் வேணும். சாவ பாத்தவங்களுக்கு அந்த தைரியம் வராது'னு புன்னகை மன்னன் படத்தில் ஒரு வசனம் வரும். அந்த தைரியம் எப்படி இருக்கும் என்று உங்க யாருக்காவது தெரியுமா? எனக்கு தெரியாது. சின்ன வயசுலே, எனக்கு பக்கத்துக்கு தெரு பொண்ணு தனக்கு தானே நெருப்பு வெச்சி கிட்டு செத்தது தான் நான் பாத்த முதல் தற்கொலை. அவங்களுக்கு எப்பிடி வலிச்சிருக்கும்னு பாக்கறதுக்காக ஒரு தடவை மெழுகுவத்தில விரல வெச்சேன். இரண்டு வினாடிக்கு மேல வெக்க முடியல. அப்போ இருந்து அந்த மாதிரி எதுவும் முயற்சி பண்றதில்லை. ஆனா, என்ன பொறுத்த வரைக்கும் தற்கொலை செஞ்சுக்குற தைரியத்துக்கு அப்புறம் அதிக தைரியம் தேவைபடுற விஷயம் 'பாடம் சொல்லி கொடுக்குற வாத்தியார் கிட்ட நேரடியா சண்டை போடறது. அதுவும் கூட படிக்குற எல்லாருக்கும் முன்னாடி சண்டை போட்டு, வாத்தியாரோட கோபத்த உசுப்பி விடறது'. ஏன்னா, ஒரு தடவை எல்லா முன்னாடியும் சண்டை போட்டுடோமுன்னா, அதுக்கு அப்பறம் அந்த பள்ளிகூடத்துல படிக்குற வரைக்கும் நமக்கு ஏழரைதான். இப்படிதான், பள்ளிகூடத்துல படிக்குற காலத்தில ஒரு வாத்தியாரம்மா கிட்ட, ஒரு குருட்டு தைரியத்தில லந்த கொடுக்க போய், ஒரு வருஷம் ஏழரையை கூட்டிட்டு திரிஞ்சேன். அந்த கதை என்னன்னா....

அப்போ நான் பதினொன்னாவது படிச்சுகிட்டு இருந்தேன். பத்தாவது முடிச்சிட்டு வேற ஊர்ல இருந்து புதுசா வந்து சேந்திருக்கேன். வகுப்புல சரியான ஜாலி பார்டின்னு பெயரடுத்த நேரம். (கல்லூரி நாட்கள்ல அதுக்கு நேர் மாறா எப்படி பெயரெடுத்தேன்னு இன்னும் புரியல?) ஒரு வகுப்புக்கு வர வேண்டிய ஆசிரியர் விடுப்புல போயிட்டாருன்னு அவருக்கு பதிலா ஒரு வாத்தியாரம்மா வந்தாங்க. ராகுவும் கேதுவும் சனிஸ்வரனோட ஜோடியா அப்பத்தான் என் வாழ்கையில நுழைஞ்சாங்க. ..

எல்லாரையும் பேசாம உட்கார சொன்னாங்க. 'மரங்கள் தூங்க விரும்பினாலும் காற்று விடுவதில்லை. கரைகள் தூங்க விரும்பினாலும் அலைகள் விடுவதில்லை'னு சொல்லுவாங்க. அந்த மாதிரி, நமக்குன்னு வந்து சேந்தான் ஒரு உத்தம நண்பன் மனோஜ். அவன் ஏதோ என்கிட்டே பேச , அந்தம்மா அத பாக்க, வந்துச்சு வினை.

"வெளிய போங்க"

பெரிய மனுஷன்னா உள்ள போறதும் வெளிய போறதும் சகஜம்தானே. கிளம்பினோம். அவன் குடு குடுன்னு ஓடிட்டான். சரியான எலிக்கு பொறந்த பய. நான் திருவாரூர் தெரு மாதிரி மெதுவா போனேன்.

"நில்லு. நீ இப்பிடி என் பக்கத்துல வந்து முன்னாடி நில்லு"னு சொல்லிடாங்க. அதுவும் "உன்னைய நிக்க வெச்சிடோமுல்ல"ங்கற மாதிரி ஒரு பார்வை. அந்த நேரம் பாத்து ஒன்னு ரெண்டு புள்ளக சிரிச்சி வெக்க எனக்கு 'shame shame'ஆ போயிடுச்சு. அந்த நிமிசமே அந்த வாத்தியாரம்மாவ பழி வாங்க முடிவு பண்ணேன். முடிவெல்லாம் சரி. சினிமா வில்லன் கணக்கா டப்புன்னு எடுத்தாச்சு. ஆனா, என்னத்த பண்ண?

அந்த அம்மாவை உத்து பாக்க ஆரம்பிச்சேன். வெறிச்சி பாத்தேன். வெச்ச கண்ண எடுக்கல. என்ன சத்தம் கேட்டாலும் எவ்வளவு நேரம் ஆனாலும் பார்வைய திருப்பவே இல்லை...

அந்த வாத்தியாரம்மாவுக்கு நான் பாக்கிறது தெரியுது. ஆனா, ஒண்ணும் பண்ண முடியலே. "ஏதாவது படிக்க வேண்டியதுதான?"னு கேட்டாங்க.

"இப்பிடியெல்லாம் நின்னுட்டு படிக்க முடியாது"

"அதுக்கு என்னையே ஏன் பாக்குற?" ஒரு கட்டத்தில வாய விட்டே கேட்டுடாங்க.

"பக்கத்துல நீங்க மட்டும்தான் இருக்கீங்க. அதான் பாக்குறேன்". மூஞ்சில அடிச்ச மாதிரி பதில் சொன்னேன்.

இந்த பேச்சுக்கு நடுவுலயும் நான் வெச்ச கண்ண எடுக்கல. அந்த அம்மாவை வெறிச்சி பாத்துகிட்டே இருக்கேன். அவங்களோ பாவம். அந்த பக்கம் திரும்புறாங்க. இந்த பக்கம் திரும்புறாங்க. புடவைய சரி பண்றாங்க. எந்திரிச்சு அப்படியும் இப்படியும் நடக்குறாங்க...

ம்...ஹும்.. நான் விடுறதா இல்லை. நம்ம சனங்க கிட்ட ஒரு கெட்ட பழக்கம். எவன் அசிங்கபட்டாலும் இவன் சிரிப்பான். நான் நிக்கறத பாத்து சிரிச்ச பொண்ணுகளும் பசங்களும் இப்போ அந்த அம்மா படுற அவஸ்தைய பாத்து சிரிச்சாங்க. அந்த அம்மாவுக்கு தர்ம சங்கடமான நிலைமை.

இவ்வளவு நடந்தாலும் நான் விடறதா இல்லை. அவங்க எங்க போனாலும் என் பார்வையை நான் அவங்கள விட்டு எடுக்கறதா இல்லை. இப்போ தண்டனை எனக்கா அந்த அம்மாவுக்காண்ணே தெரியலே. என்னை விட அவங்க பல மடங்கு பாடு பட்டுட்டாங்க.

கடைசி மணி அடிச்ச உடனே திரும்பி பாக்காம வகுப்ப விட்டு வெளிய போயிட்டாங்க. கதை இதோட முடிஞ்சா ரொம்ப சந்தோஷபட்டிருப்பேன். ஏதோ ஒரு குருட்டு தைரியத்தில அவங்க கூட முறைச்சிக்கிட்டு சண்டை போட்டேன். ஒரு நாளோட அந்த பிரச்சனை முடிஞ்சிடுமுன்னு நினைச்சேன். ஆனா, ஒரு வருஷம் கழிச்சு...

பண்ணிரெண்டாவது வகுப்புக்கு போறேன். முத நாளு முத வகுப்பு எப்பவுமே வகுப்பு ஆசிரியர்தான் நடத்துவாங்க. நானும் வகுப்பு ஆசிரியருக்காக காத்துகிட்டு இருந்தேன். இயற்பியல் வாத்தியாருன்னு சொல்லிக்கிட்டு உள்ள வந்தது இந்த அம்மா.

அப்போ என்ன பாத்து ஒரு லுக் விட்டுச்சே பாக்கணும். நம்ம 'சின்ன கவுண்டர்' படத்துல கல்யாணம் பண்ணிட்டு வர்ற சுகன்யாவ பாத்து நம்ம மனோரமா ஒரு லுக் விடுவாங்களே அந்த மாதிரி. ஞாயிற்று கிழமை காலையில எந்திரிச்சு கறி கடைக்கு போய் வரிசைல நிக்குறப்போ, வெட்டி சுத்தம் பண்ற கோழி கால பாத்தாலே நாக்குல எச்சில் ஊற ஒரு பார்வை பாப்போமே, அந்த மாதிரி. 'மாட்டுனடா மவனே'னு சொல்ற ஒரு பார்வை. அன்னிக்கு ஆரம்பிச்ச சனி, ஒரு வருஷம் என்ன சுத்தி சுத்தி அடிச்சது....

ஒரு மணி நேரம் அவங்களோட வம்பு பண்ணதுக்கு, ஒரு வருஷம் என்னய ரஜினிகாந்த் படத்துல வர்ற மாதிரி சுழட்டி சுழட்டி அடிச்சாங்க....

இப்போ யோசிச்சி பாத்தா அதெல்லாம் நடந்திருக்க வேணாம் போல தோணுது. ஆனா, அப்போதான் எனக்கு ஒண்ணு தோணிச்சு. தற்கொலை பண்ற தைரியத்துக்கு அப்புறம் அதிக தைரியம் வாத்தியார் கூட எல்லார் முன்னாடியும் சண்டை போடறதுக்குதான் வேணும். அப்புடியே, இரண்டுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு. இரண்டுமே, வடி கட்டுன முட்டாள்தனம்.....

13 comments:

Neels said...

yov edhavadhu paesidapporaen...poi OS develop panna paaru/ Algorithma develop panna paaru illa Game engine Develop pannu illa poi Amazon la full time velaya vaanga paaaru (Idhu panniduveenga)/ Illa gym ku poi bodya trim panna paaru/ Vijay padam paatha effect irunduchu unga blog..

Hari Shankar Ramakrishnan said...

Nice flair man. Keep writing.

College-la antha paer maarinathukku kaaranam pathi seekkiram research panni eluthu ...

Narmatha said...

Velai illea eppadi ellam yosikka thonudhu..... mmmm.. pattayai kilappungal!!!

Good stuff!!! wondering ..how do u find time for these...

Sarangan Rajamanickam said...

@Neels,

Nee Marave maate. But, Still You have said a good word that I will get a Job.

I wish that will come true. Thanks

Sarangan Rajamanickam said...

@Harishankar,

Thanks Machi.

I got screwed up in college by two reasons:

1. My Big Fat Mouth
2. Vithyin Sathi

Will Soon write about it

Sarangan Rajamanickam said...

@Narmatha

Thanks for the comment.

I am in Semester Vacation.So, Have plenty of time..

Saravana Pandi said...

Machi, Figure eppadi..sema kattaya..

Nee attu figuraye vida matta?

Sarangan Rajamanickam said...

@Pandi,

Ada Paavi... Kasta Kaalam.. Avanga Ennoda Vaathiyaaramma...

Jey-Vi-Chand said...

Dai Saranga,

Nee chumma parthale oru mathiriya parpae... Paavam antha teacheramma...

gayathri said...

Ukkandhu yosippeengaloooo...Sari Sari ippa paikkira yedathulayavadhu samatha irunga...

gayathri said...

Indha picture romba opta irukku...

Anantha said...

Dei ennada sappunu mudichita. ethavathu gilu gilu pa solven ethirpathen..

seri paravalla.. eppadi eruka?

Anantha said...

Dei ennada sappunu mudichita. ethavathu gilu gilu pa solven ethirpathen..

seri paravalla.. eppadi eruka?