Wednesday, May 05, 2010

என்கிட்டே அவ கடைசியா சொன்ன வார்த்தை....

"கண்ணின் கடைப் பார்வை காதலியர் காட்டி விட்டால்
மண்ணின் குமரர்க்கு மாமலையும் ஓர் கடுகாம்.."ன்னு

அந்த காலத்துலேயே ஒரு அனுபவஸ்தர் பாடி இருக்கார். பார்வையே இப்படின்னா புள்ளங்க பேசிட்டா, கேக்கணுமா? அதுவும் என்னைய மாதிரி சுமாரான பசங்கள பொண்ணுங்க பாக்குறதே பெரிய விஷயம். இதனாலதான், ரொம்ப அழகான பொண்ணுகள நாங்களே பாக்க மாட்டோம். எதுக்காக, "எங்கியோ போற மாரியாத்தா - எம் மேல வந்து ஏறு ஆத்தா" ன்னு, ரேஞ்சான பொண்ணுன்னு தெரிஞ்சும் முயற்சி பண்ணி அசிங்கபடணும்? ஆனா இத எல்லாம் மீறி, நீங்களே எதிர் பாக்காத ஒரு அழகான பொண்ணு, தன்னால வந்து உங்ககிட்ட பேசினா எப்பிடி இருக்கும்? டாஸ்மாக்குல கூட பார்ட்டி கொடுக்காத நண்பன், திடீர்ன்னு கேட்காமலேயே ஷெரட்டன் ஹோட்டல்ல தண்ணியோட பிரியாணியும் வாங்கி கொடுத்த மாதிரி இருக்கும். நான் கல்லூரியில படிச்ச காலத்தில, அந்த மாதிரி ஒரு பொண்ணு என்கிட்டே பேசுனா. அந்த கதை என்னன்னா.....

கல்லூரியில மூன்றாவது வருஷம் முடிஞ்சு, வேலை கிடைச்ச சமயம். "இளமை இளமை வயசு... தூணுக்கெல்லாம் சேலை கட்டி தொட்டு பார்க்கும் மனசு"ன்னு 'பாபா' படத்துல தலைவர் பாடுவாரே, அந்த வயசு. அப்பத்தான், எங்க அக்காவுக்கு கல்யாணம் ஆச்சு. கல்யாணத்துல ஒரு அழகான பொண்ணு கூட இல்லன்னு அக்காகிட்ட குறைபட்டுக்கிட்டேன். புருஷன் வீட்ட குறை சொன்னா பொண்ணுக சும்மா விடுமா? நீ ரிசெப்சனுக்கு ஹைதராபாத் வா. அங்க உனக்கு அழகான பொண்ண காட்டரேன்னு சொன்னா. நாமெல்லாம் பொண்ணுக்காக பொடி நடையா டில்லிக்கே போவோம். இங்க இருக்குற ஹைதராபாத். ரயில் வண்டியில போனேன். சும்மா சொல்ல கூடாது. ஒரே சூடு. சூட்டோட சூடா ஒரு குளியல போட்டேன். அப்ப கூட சூடு குறையல. அக்கா கையோட கூட்டிட்டு போய் காட்டினா. அங்க....

ஒரு பொண்ணுக்கு, மூணு பொண்ணுக இருந்தாங்க. அதுல, அவள் நடுவுல இருந்தா. (ஏன் எப்பவும் அழகான பொண்ணுக கூட்டத்துக்கு நடுவுலேயே இருக்காங்க?) என் அக்கா அவங்ககிட்ட என்னய அறிமுகம் செஞ்சு வெச்சா. ஒரு பொண்ணு எப்படி இருக்கணும்ன்னு நீங்க மனசுல கற்பனை பண்ண பொண்ணு, அப்படியே உங்க முன்னாடி வந்தா எப்பிடி இருக்கும்? ஒரு நாள் பூரா ரயில்ல ஏறுன சூடு மொத்தமும், ஒரே விநாடியில காது வழியா மொத்தமும் 'புஸ்....ஸ்'ன்னு வெளிய வந்திடிச்சு.


பாக்கி இரண்டு பொண்ணுகளையும் துரத்தி விட்டுட்டு அவகிட்ட மட்டும் பேசினேன். நான் ரொம்ப படிக்குற பையன்னு எங்க அக்கா அவகிட்ட 'ரீல்' விட்டிருப்பா போல. அதனால, நானும் 'I WALK STUDY, TALK STUDY, EAT STUDY' ன்னு செம பில்டப். கிட்டத்தட்ட, எனக்கு தெரிஞ்ச எல்லாத்தையும் பேசி அவள 'impress' பண்ணிட்டேன். அப்போதான்...

அவளுக்கும் என்ன பிடித்திருந்தது.

"உங்கள எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு"ன்னு சொன்னா.

"நீங்க ரொம்ப நல்லா பேசுறீங்க"ன்னு சொன்னா.

"நீங்க ரொம்ப smartஆ இருக்கீங்க"ன்னு சொன்னா.

கடைசியில சொன்ன இதுலதான் நெசமாவே நான் விழுந்துட்டேன். ஏன்னா, நம்ம 'smart'டோட லட்சணம் நமக்கே தெரியும். அதையும் மீறி ஒரு அழகான பொண்ணு நம்ம smartன்னு சொன்னா, என்னங்க அர்த்தம்?

"லா ல ல ல லா லா......லா ல ல ல லா லா......லா ல ல ல லா லா......"ன்னு வெள்ளை உடை தேவதைகள் என் கனவுல வந்திட்டு போனாங்க. இப்படி நான் கனவுல duet பாடி முடிக்கறதுக்கு முன்னாடி, நான் பயந்துகிட்டு இருந்த அந்த நாள் வந்திடுச்சு. அது...

ரிசப்சன் முடிஞ்சி நான் ஊருக்கு கிளம்ப வேண்டிய நாள் வந்துச்சு. 'சரி, ரயில் நிலையத்துக்கு எப்படியும் வருவா. அங்க வெச்சு நம்ம மனசுல இருக்கற விசயத்த சொல்லிடுவோம்'ன்னு முடிவு பண்ணேன். அவளும் வந்தா. கொஞ்ச நேரம் பேசுனோம். ஆனா, எதுவும் சொல்லுற தைரியம் வரலை. ரயில் கிளம்ப போகுது. மணி அடிச்சாச்சு. எனக்கு படபடப்பு கூடுது. அவங்க வீட்டுகாரங்க வேற பக்கத்துல நிக்கிறாங்க. ரயில் நகர ஆரம்பிக்குது....

'சரி. ஊருக்கு போய் போன்ல சொல்லுவோம்'ன்னு முடிவு பண்ணி ரயில் ஏறிட்டேன். ஏறி, அவள ஒரு தடவை திரும்பி பாத்தேன். அவ மெதுவா கை அசைச்சிகிட்டே, புன்னகையோட, என்ன பாத்து கடைசியா ஒண்ணு சொன்னா:

"பத்திரமா போயிட்டு வாங்க, அண்ணா"

14 comments:

Saravana Pandi said...

Super abbu..

Romba padicha moolai irukkadhunu solluvanga..ana paraviyalla unakku karpanai valam kooditte pogudhu..

oru thappu pannite..3 ponnigala pathappa oru ponnutta pesittu..adutha rendu ponnutta cell no vangiyirukkanum..

single point of failure irukkave koodathu. adhan aandavan anmmaku ellathulayum..ellathulayum..rendu rendu aa koduthurukan..

((ann..andha rendu ponnugualum anna nu thaan solliyurukkum..adhu vera vishayam))


Ana verum trailer than ottityurken... Main Picture poda ve mattra..

Neee yennn..La La..nu paduna..
ver madhiri padiyirukkalame

un school figure..peru adhula arambikkumo...

Sarangan Rajamanickam said...

@pandi...

ha..ha... May be cell Number vaangi irukkalaam..

But, when you see a girl like her, it is IMPOSSIBLE to turn your head to anyone else...

and that 'la la la la'..Common thatz a Tamil film tradition... White Angles will usually sing it....

Thanks for the comments

Sarangan Rajamanickam said...

@pandi..

Single Point of Failure....

Ada Paavi.. Nee Romba Maareetta

Jey-Vi-Chand said...

dai nalla irukku da.. You are always creative from your childhood... I sincerely appreciate...

Aduthu Hyderabad pogum pothu, marakama machan ennai kuttitudupo da

Sivaraj Subramanian said...

அதென்ன சுமாரான பையன்? யார் அது?

gayathri said...

Yenna Sarangan...tamil pattula vara ore oru variya yeduthu ivlo periya storya build up panni irukkeenga...ana romba naul kazhichu tamilla oru blog padikka sandhosama irundhadhu...:-)

Sajjan said...

Reading ur blog after a very very long time... Saranga this is really great... Unna meet panni 1 year achu but I think u have not changed at all.

Well written, well described... Dont worry u will get somebody better at ur masters :)

Sarangan Rajamanickam said...

@Jey-Vi-Chand

Thanks for the appreciation....

Kandippa solren

Sarangan Rajamanickam said...

@Sivaraj,

Machan, Naan Ennathaan Sonnen... Do you think I am worse than that?

Romba Aniyayam Daa....

Sarangan Rajamanickam said...

@Gayathri,

Romba Naal Kalichu Padichathukku Nanri

Sarangan Rajamanickam said...

@Sajjan,

Hi.hi... Tough to Change

Seenivasan said...

ayyo sarang....ivlo periya sogama. azhagana figure edhir parkkadha nerathula anna-nnu solradhai vida vazhkaila vera enna kodumai vaenum. un feelings enakku puriyudhu. hmmm...! been there.

Sarangan Rajamanickam said...

@Seeni Anna,

Finally, a person who understands my pain.. :-)

Shankar said...

indha pombalaingalae ipdi thaan boss...