விளையாட்டை பார்த்து இரசிப்பது என்பது வேறு. வெறித்தனமாக பார்ப்பது வேறு. அதில், இந்தியர்கள் எப்பொழுதுமே கொஞ்சம் இரண்டாம் ரகம்தான். இதை கூட பொறுத்து கொள்ளலாம். இந்த முறை, அந்த வெறித்தனம் சற்று அளவுக்கு மீறி போய் விட்டது. 'மும்பை அணிக்கு கருமாதி'... 'சென்னை அணிக்கு கருமாதி' என்றெல்லாம் இணையத்தில் பதிவுகள் விழுகின்றன. விளையாட்டு முடிந்தவுடன், 'மும்பை அணிக்கு சாவு கொட்டு அடிக்கிறோம்' என்று ஆட்டம் போட்டு யூடியூ-பில் போடுகின்றனர். அதை பேஸ்புக் போன்ற இணையதளங்களில் பகிர்ந்து கொள்கின்றனர்.
ஒரு பக்கம், மும்பை அணி தோற்றதால், பரிசு கோப்பையை வழங்கும் முன்னரே பாதி மக்கள் வெளியே சென்று விட்டார்கள். இன்னொருபுறம், சென்னைகாரர்கள் 'நாங்களா இருந்தா யார் ஜெயித்தாலும் பாராட்டி இருப்போம். மராத்திகாரன் புத்திய காட்டிடான்'னு பதிவு போடுகின்றார்கள். இத்தனைக்கும் அணியின் வீரர்கள் ஒரே நாட்டை சேர்ந்தவர்கள் கூட இல்லை. ஒவ்வொரு அணிக்கும் பெயரில் மட்டும்தான் 'மும்பை', 'சென்னை',..... மற்றபடி எல்லா மாநில, நாட்டு வீரர்களும் இணைந்துதான் விளையாடுகிறார்கள். வெறும் பெயருக்கே, இந்த ஆட்டம் தேவையா...
விளையாட்டு அமைதியை வளர்க்க வேண்டும். இங்கு பகை மட்டும்தான் வளர்கிறது. ஒரு சாதாரண விளையாட்டை கருமாதி வரைக்கும் எடுத்து செல்லும் நம் மன பக்குவம் கேலிக்குரியது. சமயம் கிடைக்கும் போதெல்லாம், சென்னைக்காரன் மும்பைகாரனை திட்டுவதும் மும்பைக்காரன் மதராசியை திட்டுவதும், இறுதியில் 'நாமெல்லாம் ஒரு தாய் மக்கள்' என்று ஒற்றுமை புராணம் பாடுவதும், இந்தியாவின் ஒருமைபாட்டை பற்றி நகைக்க வைக்கிறது.... வாழ்க, இந்திய ஒருமைப்பாடு...

1 comments:
Well Said Saranga... As always you look at things from the side most of them dont...
Post a Comment