தென்றல்
அன்புள்ள தென்றலுக்கு,
கல்லூரி சாலையிலே உன்னை சந்தித்தேன்
பிறகு
எந்நேரமும் உனைப் பற்றியே சிந்தித்தேன்
ஊன் மறந்தேன் உறக்கம் மறந்தேன்
உன்னை மறக்கவில்லை
ஏன் நினைத்தேன் எதற்கு நினைத்தேன்
என்று தெரியவில்லை
நீயே எனது ராஜ்ஜியம்
உன்னால் ஆனது
என் மதிப்பெண் பூஜ்யம்
அதைப் பற்றிய கவலை இல்லை எனக்கு
ஆனால்
எனைப் பற்றிய நினைப்பே இல்லை உனக்கு
உன் மனதில் யாரோ நான் அறியேன்
இருப்பினும் உன் நினைவை விட்டு
என்றும் நான் பிரியேன்
ஒரு தலை காதல் பல இப்படித்தான்
முடிகின்றது
அதை நினைக்கும் பொழுது
ஏன் கண்களில் நீர் தானாக வடிகின்றது
இத்துடன் இக்கடிதத்தை முடிக்கின்றேன்
முடித்தபின் நான் இதை கிழிக்கின்றேன்
ஏனென்றால்
உன் மீது களங்கம் விழுந்தால்
நான் இறப்பேன்...
2 comments:
never realized that i had friendship with a guy with such enormous creativity !! Well done !!
Y dont u publish some of ur latest ones :)
Post a Comment