Wednesday, September 02, 2009

ஆந்தராக்ஸும் - ரீபில்லும்

அமெரிக்கா வந்து காலேஜு ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி, நம்ம ரூம் நண்பர்களும் பக்கத்துக்கு ரூம் நண்பர்களும் தண்ணியடிக்க கூப்பிடாங்க. சந்தோசத்துல பெரிய சந்தோசம் மத்தவங்கள சந்தோசப் படுத்தறதுதான். நம்மளும் உடனே கிளம்பிட்டோம். அதுல பாருங்க, அன்னிக்கு வெள்ளிகிழமை offer. நம்ம பக்கத்துக்கு பார்ல, 10 டாலருக்கு நாலு லார்ஜ் அடிக்கலாம். நானும் போய் எனக்கு ஒரு கிளாஸ் எடுத்தேன்.

பசங்க எல்லாம் அமெரிக்காக்கு புதுசு வேற. அதனால, Accent கத்துக்குறோமுன்னு english- அ இழுத்து இழுத்து பேசி நோகடிப்பாங்க. அதுல ஒரு நண்பன், கடைக்காரன் கிட்ட போய், 'I want Antharax'ன்னு சொல்லிட்டான். கடைக்காரன் பேய் முழி முழிக்கறான். எனக்கும் ஒண்ணும் புரியல. நண்பன் மூஞ்சிய பார்த்தேன்.

'என்னடா சொல்றே? கண்ட வியாதி பேரையும் சொல்றே. கடைக்காரன் மிரள்றான் பாரு'

'என்ன சாரங்கன்? உங்களுக்கு Antharax தெரியாது. சரக்குல வெறும் ice cubes போட்டு அடிக்கறது'

அப்பத்தான் விளங்குச்சு. பய 'On the Rocks'அ தான் அந்த லட்சணத்துல சொல்லி இருக்கான். அத கடைகாரன்கிட்ட சொல்லி முடிக்கறதுக்கே உன் பாடு என் பாடு ஆயிடுச்சு. சரி அதுதான் முடிஞ்சிசுன்னு பாத்தா, பீருக்கு ஊறுகா கேட்டு கடுப்படிக்குறாங்க. 'BudWeiser'அ 'புட்வெய்சர்'ன்னு கேட்டு கொடச்சல் கொடுத்தானுங்க. இதெல்லாம் பரவாயில்ல...

இன்னொரு நண்பன் 'Miller Lite' பீர கிளாஸ் டம்ளர்ல வாங்கி அடிச்சுகிட்டு இருந்தான். ஒரு ரவுண்டு முடிச்சிட்டு, நேரா கடைகாரன்கிட்ட போனான்.

"இதுக்கு refill கிடைக்குமா?"

அநேகமா இனி அந்த கடைக்காரன் 10 டாலருக்கு 4 லார்ஜ் கொடுக்க மாட்டான்......

1 comment:

Anonymous said...

super.... yaaruppa intha punyavaanunga????