Saturday, August 29, 2009

பொய் சொன்ன வாயுக்கு போஜனம் கெடைக்காது

ஒரே மாதிரி ரெண்டு பேர் ரெட்டையா பொறந்தா எப்பிடி இருக்கும்னு நம்ம ஷங்கர் ஒரு படம் எடுத்தாரே - 'ஜீன்ஸ்'னு. எல்லாரும் பாத்திருப்பீங்க. அதுல நம்ம ஐஸ்வர்யா ராய் வர்ற நேரத்த கொஞ்சம் மறந்தா, அவங்க அப்பாவா வர்ற S.Vee.சேகர் ஒரு வசனம் நினைவுக்கு வரும். 'பொய் சொன்ன வாயுக்கு போஜனம் கெடைக்காது. நான் சொன்ன பொய்க்கு எனக்கு ஒரு வாய் காபி கூட கெடைக்காது'னு. நம்ம எல்லாரும் நம்ம வாழ்கையில ஏதாவது பொய் சொல்லி இருக்கோம். நான் கொஞ்சம் அதிகமாவே சொல்லி இருக்கேன். எனக்கு காபி இல்ல, தண்ணியே அதிகம்தான்.

அப்ப நான் +1 படிச்சேன். முன்னாடி படிச்சா ஸ்கூல்ல அஞ்சாங் கிளாஸ்ல இருந்தே எனக்கு computer சொல்லி கொடுத்திருந்தாங்க. அத வெச்சு கொஞ்சம் scene போட்டு முதல் கொஞ்ச நாள்லயே டீச்சர் கிட்ட நல்ல பேர் எடுத்திட்டேன். அதனால, அவங்க என்ன அதிகமா கவனிச்சதும் இல்ல. கண்டிச்சதும் இல்ல. நமக்கும் அதானே வேணும். எல்லா lab-யும் கட் அடிச்சுட்டு வீட்டுக்கு போய்டுவேன். மத்தவங்க எல்லாரும், ஒழுங்கா ப்ரோக்ராம் பண்ணி, அத நோட்ல எழுதி அன்னிக்கே கையெழுத்து வாங்கிடுவாங்க. நான் இத செய்யாம தப்பிச்சிகிட்டே வந்தேன். வந்தது வருஷ கடைசி....

முழு பரீட்சைக்கு முன்னாடி எல்லா கையெழுத்தையும் காட்டி கடைசியா கையெழுத்து வாங்கணும். நம்மகிட்டத்தான் ஒரு கையெழுத்து கூட இல்லையே. அப்புறம் எங்க மொத்தமா வாங்குறது? இதுல, கொடுமை என்னன்னா அந்த கையெழுத்த, டீச்சர் எங்க கிளாசுல கூட போடலை. எல்லாரையும் 'staff room'க்கு வர சொல்லிடாங்க. அங்க சிக்கினேன், ஒவ்வொரு வாத்தியும் என்ன கிழி கிழின்னு கிழிச்சிருவாங்கே... என்ன பண்றது?...

சரி.. மொதல்ல நம்ம நோட்ட ரெடி பண்ணுவோம். அப்புறமா, கையெழுத்த பத்தி யோசிபோம்னு, புதுசா ஒரு நோட்டு வாங்கி எல்லா ப்ரோக்ரமையும் எழுதி முடிச்சேன். ஆனா, கடைசி வரைக்கும் ஒரு யோசனையும் தோணல. கூட படிச்சவனெல்லாம், 'நேரா போய் மன்னிப்பு கேட்டுறு'னு சொல்றாங்க. நம்மதான், 'ஒரு முடி உதிந்தாலும் அங்கேயே உசிர விடற கவரி மான் வம்சமாச்சே'. எப்பிடி மன்னிப்பு கேட்க முடியும்? ஆனா, வேற வழி தெரியலே.... சரி. கேட்டு தொலைப்போம்னு 'Staff Room'க்கு போனேன். விதி வலியதுன்னு சொல்லுவாங்கே. அத அங்கதான் பாத்தேன்.

எனக்கு முன்னாடி ரெண்டு புள்ளங்க அங்க நிக்குது. அதுவும், அதுல ஹரிணினு ஒரு பொண்ணு. வாழ்க்கையில படிக்கிறத தவற வேற எதையுமே செய்யாத புள்ள. எப்பவுமே மொத மார்க்குதான் வாங்கும். அது வேற நிக்குதே? இது முன்னாடி திட்டுனா, புள்ளங்க அத்தன பேருக்கும் தெரிஞ்சு என் மானமே போயிடுமே. அப்பத்தான், அந்த பொண்ணு நோட்ட நீட்டுச்சு. அதோட கேட்ட நேரம், கடைசி ஒரு ப்ரோக்ராம் மட்டும் நேரத்துக்கு கையெழுத்து வாங்கல போல. அதுக்கு அப்புடி ஒரு திட்டு விழுகுது. எல்லா வாத்தியார்களும் பரிதாபமா அந்த பொண்ண பார்த்தாங்க. அவ நல்ல படிக்குற பொண்ணு. பரிதாபமா பாப்பாங்க. நான் திட்டு வாங்குன்னா எல்லா பயலும் தீபாவளி இல்ல கொண்டாடுவாங்க. அந்த புள்ள அழுதுகுட்டே போயிடுச்சு. ஒரு ப்ரோக்ரமுக்கே அந்த கதி. இங்க மொத்தமுமே புதுசு. என்ன பண்றது? 'பளிச்'சுன்னு ஒரு யோசனை தோணலயேன்னு தவிக்குறேன். 'பளிச்'.. 'பளிச்'... 'பளிச்'.. என்னமோ திடீர்னு மனசுல நிறைய விளக்கு தோணுச்சு. யோசனை வந்தாச்சு....

மூஞ்சிய பாவமா வெச்சுகிட்டு நோட்ட கொடுத்தேன். என்னைய பாத்து சிரிச்சிகிட்டே நோட்ட வாங்கினவங்களுக்கு ஒரே அதிர்ச்சி. அவங்க கிளாசுல இப்பிடி ஒருத்தன் இருந்தத அவங்களால நம்ப முடியல. என்ன பார்த்தாங்க.

'என்னடா இது?'.

ஒரு குருட்டு தைரியத்தில சொன்னேன், 'நான் போன வாரமே மொத்தமா கையெழுத்து வாங்கிட்டேன். நீங்கதானே போட்டீங்க. மறந்துட்டீங்களா?'னு கேட்டேன்.

அந்த அம்மா நெஜமாவே குழம்பிட்டாங்க. 'அப்ப இது என்னடா?'

அதுக்கு மொத வாரந்தான் கார்த்திகை தீபம் முடிஞ்சிது. வீடெல்லாம் விளக்கேத்தி முருகன கும்பிடுவோமே, அந்த பண்டிகை. பொரி உருண்டைக்கு மட்டுமே உபயோகமா இருந்த அந்த பண்டிகை, அன்னிக்கு என்ன எங்க டீச்சர்கிட்ட இருந்து காப்பாத்துச்சு.

'போன வாரம், கார்த்திகை தீபம் டீச்சர். அதுல எங்க பாட்டி மட்டும் விளக்கு வெச்சிட்டு உள்ள தூங்கிட்டாங்க. விளக்கு துணில பட்டு எரிய ஆரம்பிச்சிடுச்சு..'

'அய்யய்யோ... என்னடா ஆச்சு..'

'ஒன்னும் சேதம் இல்லீங்க. பக்கத்துல பாத்துட்டு உடனே அணைச்சிட்டாங்க. என்னோட ஒரு சில நோட்டுங்கதான் எரிஞ்சு போயுடுச்சு. அதனால்தான், புதுசா எழுதிட்டு வந்திருக்கேன்'. அப்போ என் முகத்த பாத்திருந்தா அரிச்சந்திரனுக்கு அப்புறம் என்னதான் சொல்லுவீங்க. அந்த டீச்சர் பாவம். ரொம்பவே உருகிட்டாங்க.

'அதுக்காக மொத்தமா ஒரு வாரத்துல எழுதனுமா? சொல்லியிருந்தா, இன்னும் நேரம் கொடுத்திருப்பனே? நீ போ.. நான் கையெழுத்து போட்டுறேன்.'னு சொன்னாங்க.

அது மட்டுமில்ல, எனக்கு lab-ல முழு மார்க்கும் போட்டாங்க. ஒழுங்கா செஞ்ச அந்த ஹரிணிக்கு கூட கொஞ்சம் கம்மியாகிட்டாங்க. பாவம்... இன்னிக்கு யோசிச்சு பாத்தாலும் குருட்டு தைரியத்துல நான் சொன்ன பொய் மனச உறுத்துது. என்னிக்காவது அந்த டீச்சர பாத்தா உண்மையா சொல்லிடனும். அதோட, இன்னொன்னும் கேக்கணும், எனக்கு காபியாவது கெடைக்குமா?....

4 comments:

Seenivasan said...

that's called communication skills. :)

Sarangan Rajamanickam said...

Yeah anna... Was Useful much in CTS..:-)

Anonymous said...

Thalaiva... poi sollrathula ellaraiyam minchitaeda nee... :)

Hari Shankar Ramakrishnan said...

Athukku prayachithamaa nee vaena oru naal unna viratham irunthuru.

Arasiyalla ithellaam saatharanamappa ...