Friday, September 19, 2008

Limerick - Anti Limerick

'Limerick' என்ற வார்த்தையை இன்று பார்த்தேன். கொஞ்சம் வலை தளத்தை ஆராய்ந்த பொழுது, இது ஒரு வகையான கவிதை நடை என்று தெரிந்தது. அதாவது ஐந்து வரிகளில் (கொஞ்சம் ஒரு மாதிரியான) நகைச்சுவை கவிதையே 'Limerick'. இதையே கொஞ்சம் வேறு மாதிரி எழுதினால் அது 'Anti Limerick'. மேலும் தெரிந்து கொள்ள இந்த சுட்டி பயன்படும்.

என் சிறு மூளையை கசக்கி, நானும் ஓர் Anti Limerick எழுத முயன்றேன். Anti Limerick கவிதை நடையை தவறாக உபயோகப்படுத்தி இருந்தால், சொல்லுங்கள்..திருத்தி கொள்கிறேன்.. இப்பொழுது என்னுடைய Anti limerick (என்ற நம்பிக்கையில் எழுதப்பட்ட கவிதை):

நிலவுக்கு நிகரான அழகிய பெண்
பார்த்தாலே விட்டு விலகாது என் கண்
பார்க்கும் போதே கட்டிக் கொண்டாள் தாலி
சோகத்துடன் நான் இடம் விட்டு காலி
செய்து சென்றேன் அவள் தங்கை பின்.....

No comments: