Thursday, March 13, 2008

ஒரு யோசனை......

உடல் தளர்ந்து, முகம் வாடி, கண்களில் ஒளி மங்கி, எப்பொழுதும் சொல்லும் ஒரு உற்சாக "ஹாய்" இல்லாமல் ஒருவரால் இரண்டே நாட்களில் மாற முடியுமா? அப்படி மாறிய ஒருவரைத்தான் நான் பார்த்தேன்....

அமெரிக்கா பொருளாதாரம் தற்போது சரிந்து வருவதும், அதன் காரணமாக பல்வேறு நிறுவனங்கள் ஆட்குறைப்பு செய்வதும் எல்லோரும் அறிந்ததே. வெளியில் நடக்கும் செய்திகள் என்னை பாதித்தது இல்லை. ஆனால், நான் வேலை செய்யும் இடத்திலே அது நடந்த பொழுது ஏற்பட்ட சூழல், நெஞ்சை அறைவது போல் இருந்தது. நான் வேலை செய்யும் நிறுவனத்தில் பல பேரின் வேலை பறிக்கப்பட்டது.

இன்றைய பொருளாதார சூழலில் அனைவரையும் வேலைக்கு வைத்து கொள்ள இயலாது என்பது எனக்கு புரிகிறது. அதை போலவே, சரியாக வேலை செய்யாதவர்களை அனுப்புவதிலும் எந்த தவறும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. ஆனால், நன்றாக வேலை பார்த்தும் பொருளாதார சூழ்நிலையால் பலருக்கு வேலை போவதுதான் வருத்தமாக இருக்கிறது.

ஒரு யோசனை......

நான் வேலை செய்யும் 'இன்சூரன்ஸ்' நிறுவனம் தொழில் செய்ய பணம் இல்லை என்ற காரணத்தால் அதன் தொழில்நுட்ப பிரிவில் ஆள் குறைப்பு செய்கிறது. அப்படி செய்யாமல், நிறுவன ஊழியர்கள் (அனைவரின்) சம்பளத்திலும் ஒரு 0.5% (உதாரணத்திற்கு..) குறைத்தால் அவர்களின் பண தேவை பூர்த்தி ஆகாதா? பின், பொருளாதாரம் சீரான பின்பு வரும் லாபத்தில் அனைவருக்கும் இதை ஈடு கட்டலாமே....

இப்படி செய்வதால், மக்கள் மத்தியில் இந்த இன்சூரன்ஸ் நிறுவனத்தின் மதிப்பு உயரும் அல்லவா? "தன் நிறுவனத்தின் ஊழியர்களையே இந்த நிறுவனம் கை விடவில்லை. நான் இந்த நிறுவனத்தின் வாடிக்கயளரானால் என்னையும் இந்த நிறுவனம் கை விடாது" என்று மக்கள் நினைக்க மாட்டார்களா? (சரியான விளம்பர யுக்திகள் மூலம் இது சாத்தியம் என்றே நினைக்கிறேன்)

இந்த யோசனை வேலை செய்யுமா என்று தெரியவில்லை. ஒரு சாதரண வேலை செய்யும் எனக்கு இது தோன்றி இருக்கும் என்றால், மிக பெரிய நிறுவனங்கள் நடத்தும் மனிதர்களுக்கும் இது தோன்றி இருக்கும். ஆனால், இது உதவாது என்று அவர்கள் கை விட்டிருக்க வேண்டும். ஆனால், இது ஏன் உதவாது, ஏன் வேலை செய்யாது என்று எனக்கு புரியவில்லை. புரிந்தவர்கள் விளக்கம் கொடுங்களேன்.....

2 comments:

Seenivasan said...

I thnk getting rid of people will benefit the company in a long run than keeping 'em as you suggested.

Sarangan Rajamanickam said...

Yes Anna... But what I did not know is the exact reasoning behind it... As you are the manager, do you have any idea...