Thursday, February 21, 2008

வாழ்க உங்கள் பெண்ணுரிமை......

இன்று இரண்டு செய்திகளை படிக்க நேர்ந்தது. செய்திகளுக்கான சுட்டி கீழே:

1. டைம்ஸ் ஒப் இந்தியா சுட்டி 1
2. டைம்ஸ் ஒப் இந்தியா சுட்டி 2

இரண்டுமே, கால் சென்டரில் வேலை பார்த்துவிட்டு வீடு திரும்பும் வழியில் கற்பழித்து கொலை செய்யப்பட்ட பிரதீபா வழக்கு விசாரணை விபரம். உச்ச நீதிமன்றம் அந்த கால் சென்டரின் தலைவரே இதற்கு பொறுப்பு (இப்பொழுது அவர் NASSCOM தலைவர்) என்று கூறி உள்ளது.

இதை பற்றி எழுதும் முன்பு இரண்டு விஷயங்கள். முதலில், அந்த பெண்ணிற்கு நடந்தது மிக பெரிய கொடுமை என்ற கருத்திலும் இதற்கு காரணமானவர்கள் தண்டிக்க பட வேண்டும் என்பதில் யாருக்கும் எந்த மாற்று கருத்தும் இருக்கும் என்று தோன்றவில்லை. அதை போலவே, தனது நிறுவனத்தின் ஊழியர்கள் பணியில் செய்யும் தவறுகளுக்கு நிர்வாக தலைவர்கள் பொறுப்பு ஏற்க வேண்டும். சட்டப்படி இல்லை என்றாலும் தார்மீக அடிப்படையில் அவர்கள் பொறுப்பு ஏற்க வேண்டும் என்பது எனது கருத்து. இதன் அடிப்படையில் நீதிமன்றத்தின் தீர்ப்பில் எனக்கு முழு உடன்பாடே.

ஆனால் ஒரு விஷயம் என் மனதை நெருடுகிறது. இந்த சம்பவத்தை வைத்து கொண்டு பெண்களுக்கு இரவு ஷிப்ட் வேலை தரக்கூடாது என்று சிலர் வாதாடுகிறார்கள். எனக்கு புரியாத விஷயம்:

நிறுவனங்கள் அதிக நேரம் வேலை வாங்குவதை எதிர்ப்பவன் நான். ஆனால், அதுதான் விதி என்று வந்து விட்டால், அது ஆண் பெண் இருவருக்குமே சமம்தான். ஒரே படிப்பை படித்து, ஒரே வேலைக்கு வந்து, ஒரே சம்பளம் வாங்கிவிட்டு நான் பெண் அதனால் இரவு ஷிப்ட் பார்க்க மாட்டேன் என்று சொல்வது சரியில்லை. (கர்ப்ப காலங்கள் விதி விலக்கு)

இரவு ஷிப்டில் பெண் வேண்டாம் என்றால் என்ன அர்த்தம்? பெண் இரவுக்குள் வீட்டுக்குள் சென்று ஒளிந்து கொள்ள வேண்டும்? வெளியே வரக்ககூடாது... அதுதானே? ஆக பலர் பேசும் பெண் சுதந்திரம் என்பது பகல் வேலைக்கு மட்டும்தான் போலும்.....

அதை போல, பெண்ணுக்கு இரவில் ஆபத்து அதனால் அவர்கள் வெளியே வரக்கூடாது என்று சொல்வது, தும்பை விட்டு வாலை பிடிக்கும் கதை.... ஆபத்துக்கு காரணம் ரவுடிகள், பொறுக்கிகள்... அவர்களை ஒழிப்பதை விடுத்து அல்லது அதற்கு நடவடிக்கை எடுக்க அரசை கேட்பதை விடுத்து, பெண்களுக்கு இரவு ஷிப்ட் வேலை ஷிப்ட் தந்து 'கஷ்டப்படுத்த' கூடாது என்று வாதாடும் அறிவாளிகளே..... வாழ்க உங்கள் நியாய தர்மம், வாழ்க உங்கள் பெண்ணுரிமை.....

No comments: